free website hit counter

மூலிகை அறிவோம் - பித்தம் போக்கும் பூசணி

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இது இந்தியா மற்றும் இலங்கையில் நாட்டுப்புறங்களில் பெரும்பாலும் பயிரிடப்படுகின்றது.
கொடி வகையைச் சார்ந்ததாயினும் ஏறிப்படர்வதில்லை. காரணம் அதன் காயின் மிக பெரிய பரிமாணமே ஆகும். அதனால் நிலத்திலேயே படரவிடபட்டு அறுவடை செய்யப்படும். அத்தகைய பூசணியின் பூரண மருத்துவ குணம் பற்றி இம் மருத்துவ உரையில் பார்க்கலாம்.

தாவரவியல் பெயர்-Cucurbita maxima
குடும்ப பெயர்- Cucurbitaceae
ஆங்கிலப் பெயர்- Pumpkin, Red gourd
சிங்கள பெயர்- kumbala, wattakka
சமஸ்கிருத பெயர்- Dangari, Gramya
வேறு பெயர்கள்- சர்க்கரைப் பூசணி, சர்க்கரைப் பறங்கி, பூழியபலம், பறங்கிக்காய்

பயன்படும் பகுதி-
காய், விதை


சுவை- இனிப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- இனிப்பு


வேதியியல் சத்துக்கள்-
Fruit-
Fat, protein, Pentosan, Vitamin A, Sugar, Cucurbitene, Cucurbitaxanthin, Niacin, Riboflavin, Aneurin, Calcium, Iron, Phosphorus, Vitamin B, Hydrocyanic acid, ascorbic acid, oxalate

Seeds-
Fixed oil, saponin, Zinc, Vitamin A,B

மருத்துவ செய்கைகள்-
Diuretic-சிறுநீர் பெருக்கி
Emollient- வரட்சியகற்றி
Refrigerant-குளிர்ச்சி உண்டாக்கி
Sedative- தாதுவெப்பகற்றி
Vermifuge- புழுக்கொல்லி


தீரும் நோய்கள்-
அனலால் வரும் அழற்சி
மிகுபித்தம்
புண்கள்
தட்டைப்புழு
சில்விடம்
வெள்ளை சாய்தல்
கொனோரியா


குறிப்பு- இதில் கோடைப் பூசணி அல்லது குழிப்பறங்கிக்காய் என ஒரு வகை உண்டு. அது வாதக்கடுப்பு,கப விருத்தி, வாத சூலை, அக்னி மாந்தம் இவற்றை உண்டாக்கும்.

பயன்படுத்தும் முறைகள்-
இக்காயை அநேகர் கறியாக சமைத்து உண்பது வழக்கம்.

உட்சதையை விதை நீக்கி வேகவைத்து பிசைந்து, புண்களின் மீது வைத்துக் கட்ட துர்நாற்றம் நீங்கி சதை வளர்ச்சி உண்டாகும்.

உட்சதையை விதை நீக்கி வெயிலில் நன்றாக காயவைத்து இடித்து லேகிய பதமாய் செய்து கொடுக்க இரத்த வாந்தி, இரத்தக் கோழை(சளி) இவைகளை நிறுத்தும்.

பழுத்த காயின் காம்பை எடுத்து நன்றாக உலர்த்தி நீரில் அரைத்துக் கொடுக்க சில்விடம் நீங்கும்.

சதையை உலர்த்திச் சீரகம் சேர்த்து இடித்து சிறிது கற்கண்டுடன் உண்ண வேனிற்கால வெப்பத்தால் உண்டாகும் அழற்சி தணியும்.

35 கிராம் விதையை வறுத்து சர்க்கரை கலந்து இரவு படுக்கைக்கு போகும் முன் தின்று , மறுதினம் காலையில் ஆமணக்கெண்ணெய் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர தட்டைப்புழு செத்து விழும்.

விதையை 16g-32g எடை எடுத்து கஷாயமிட்டு சாப்பிட வெள்ளை மூத்திர நோய்களை குணப்படுத்தும்; மூத்திரத்தை பெருக்கும்.

விதையிலிருந்து ஒரு வகை எண்ணெய் நரம்பு உரமாக்கியாக பயன்படுத்தபடுகிறது.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction