free website hit counter

மூலிகை அறிவோம் - பூலோக கற்பவிருட்சம் தென்னை

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பிள்ளையானவன் தன்னைப் பெற்று வளர்த்த தாய் தந்தையர்களுக்கு, அவர்கள் தள்ளாத காலத்தில் எவ்வாறு கடமைப்பட்டுள்ளானோ, அது போலவே தென்னம்பிள்ளையும் தன்னை வைத்து வளர்த்தவர்களைத் தன் தலையிலுள்ள காய்களால் காப்பாற்றுகிறது என்பதை "தளரா வளர் தெங்கு, தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருதலால்" என்பதிலிருந்து கண்டுகொள்ளலாம். தென்னைமரத்தின் சகல பாகங்களும் உபயோக முள்ளவை, ஆதலினாலே இதற்குப் "பூலோக கற்பக விருட்சம் " எனவும் பெயரிட்டுள்ளார்கள்.
இவ்வாறான பல சிறப்புக்களை கொண்ட தென்னையின் மருத்துவ பயன்களை இவ் வார மருத்துவ உரையில் நோக்கலாம்.

தாவரவியல் பெயர்- Cocus nucifera
குடும்ப பெயர்- Palmae ,Arecaceae
ஆங்கிலப் பெயர்- Coconut palm
சிங்கள பெயர்- pol gaha
சமஸ்கிருத பெயர்- Narikela
வேறு பெயர்கள்-
தெங்கு, நாளிகேரம், தென், பூலோக கற்பக விருட்சம், இலாங்கலி, புல்மரம்

பயன்படும் பகுதி-
இலை, குருத்து, பூ, பாளை, காய் ,வேர்

பூ ,பாளை
சுவை- துவர்ப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- கார்ப்பு

காய்
சுவை -இனிப்பு
வீரியம் - சீதம்
பிரிவு -இனிப்பு

வேதியியல் சத்துக்கள்-
Potassium
Minerals
Vitamins
Brix
Reducing sugar

மருத்துவ செய்கைகள்-
பூ
உடலுரமாக்கி - Nutritive
பசித்தீத்தூண்டி - Stomachic
குளிர்ச்சியுண்டாக்கி - Refrigerant
சிறுநீர்ப்பெருக்கி - Diuretic

இளநீர்
குளிர்ச்சியுண்டாக்கி - Refrigerant
உள்ளழலாற்றி - Demulcent
மலமிளக்கி - Laxative
அற்பச்சிறுநீர்ப்பெருக்கி - Mild Diuretic.

வழுக்கை
சிறுநீர்ப்பெருக்கி - Diuretic
குளிர்ச்சியுண்டாக்கி - Refrigerant

தேங்காய்ப்பால்
குளிர்ச்சியுண்டாக்கி - Refrigerant
மலமிளக்கி -Laxative
உடலுரமாக்கி - Nutrient
சிறுநீர்ப்பெறுக்கி - Diuretic
புழுக்கொல்லி - Anthelmintic

கள்
வெப்பமுண்டாக்கி - Stimulant
மலமிளக்கி - Laxative

வேர்
சிறுநீர்ப்பெருக்கி - Diuretic

குறிப்பு
கள்
தென்னங்கள்ளானது குளிர்ச்சியையும், வாதபித்தகப தோஷங்களையும் உண்டாக்கும்.
மேலும், சோணித சுக்கிலப்பெருக்கம்,குருதிச்சோகை, சோபை,வாத பித்த தொந்தம், இரத்தக்கழிச்சல், கரப்பான், பேதி, பிரமேகம் இவைகளை உண்டாக்கும்.
அறிவுகெடும்.

கற்கண்டு
இதனால் தொண்டைக்குள் திமிர், உதிரத்தில் அழுக்கு, சொறிமுகம், சிலேத்துமவாத தொந்தம், வாதம், இளைத்ததேகிகளுக்கு ஆயாசம், மந்த புத்தி ஆகியவை உண்டாகும்.

வெல்லம்
செரியா மந்தம், வீக்கம், நீரேற்றம் அதிகரிக்கும்.

தேங்காய்ப் பால்
வாத விகாரம், பித்தாதிக்கம், கரப்பான் உண்டாகும்.

பிண்ணாக்கு
நமைச்சல், சிரங்கு, விரணம், நீங்காத கரப் பான், மலாசயக்கிருமிகள் ஆகியவைகள் உண்டாகும்.

தீரும் நோய்கள்-
பாளை (பூ)
இளம்பாளைப் பூவால், பிரமேகம், உட்காய்ச்சல்,ரத்த பித்தம், அசிர்க்கரம், ஒழுக்குப்பிரமியம், விடபாகநோய் ஆகியவை நீங்கும்.

குருத்து
கப உபத்திரவமும், இரத்தமூலமும் நீங்கும்.

தேங்காய்ப் பால்
சுக்கில விருத்தியுண்டாகும்.

தேங்காய் நெய்
தீப்புண், தந்தமூலரோகம், படர்தாமரை ,சிரங்கு, ஆகியவை தீரும், தலைமயிர் வளரும்.

பயன்படுத்தும் முறைகள்-
தென்னம் இளம்பாளையை வெட்டி வந்து, மடல் போக்கிப் பூவை இடித்துச் சாறு பிழிந்து 84 ml எடுத்து அத்துடன் சமன் எடை தயிரும், 35 ml பழரசமும் சேர்த்துத் தினம் இரண்டு அல்லது மூன்று வேளை கொடுக்க, இரத்த சீத வயிற்றுக் கடுப்பு, நீர்ச்சுருக்கு ஆகியவை தீரும். பத்தியம் - புளியாகாது.

மது
பூம்பாளையிலிருந்து மது எடுக்கிறார்கள், புளிக்காத மதுவைக் கர்ப்பிணிகளுக்கு கொடுக்க குழந்தைகளுக்கு நல்ல வசீகரத்தைத் தரும். இதனை குறைந்த அளவில் கொடுக்க வயிற்றுக் கடுப்புத் தீரும்.ஒருவித மயக்கமுண்டாகும்.

இளநீர்
இதை அருந்தத் தாகந்தீரும், மேலும் இதை சிறுநீர் பெருக்கிகளுடன் சேர்த்து உள்ளுக்குக் கொடுக்கலாம்.
இது, சில குளிர்ச்சித் தைலங்களிலும், கண்ரோக மருந்துகளிலும் சேர்க்கப்படுகின்றது.

தேங்காய்
வேறு பெயர் -திரியக்ஷி ,முக்கண்ணன்
பித்தத்தை அதிகரிக்கச் செய்யும். இப்பாலைக் காய்ச்சித் தைலம் எடுக்கலாம்.
இப்பாலைக்கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய்ப்புண், தொண்டைப் புண் முதலியன தீரும்.

இப்பாலைக் காய்ச்சி வரும் எண்ணெயை நெருப்புச் சுட்ட காயங்களுக்கும் புண்களுக்கும் போட்டுவர குணமாகும். மேற்படி எண் ணெயைத் தலையில் தடவிவர கூந்தல் வளரும்.

தேங்காயிலிருந்து மூன்று விதமாக எண்ணெய் எடுக்கலாம்.
1 - சிரட்டை
2 - கொப்பறைத் தேங்காய்
3 - தேங்காய்ப்பால்

1. சிரட்டைத் தைலத்தை வெளிப் பிரயோகமாக மாத்திரம் வழங்கலாம். அதனால் தோல்வியாதிகள் தீரும்.
2.கொப்பறையிலிருந்து ஆட்டி எடுக்கும் எண்ணெயைக் கறி பதார்த்தங்கள் தாளிப்பதற்கும், தலையில் தேய்த்துக் கொள்வதற்கும் பயன்படுத்தலாம்.
3. தேங்காயைத் துருவிப்பிழிந்த பாலைக் காய்ச்சி எடுக்கும் எண்ணெயைத் தலைக்குத் தேய்க்கவும், கறிக்குமாக பாவிப்பதுண்டு. தலை மயிர் நன்றாய் வளரும். அன்றியும் இது விரணங்களுக்குக் காய்ச்சும் தைலங்களில் சிறப்பாகச் சேரும்.

சிரட்டைத் தைலம் செய்முறை.- சிரட்டையைச் சிறு துண்டுகளாக்கி, ஒரு பானையிலிட்டுக் குழித் தைலமாக இறக்கித் தைலம் எடுக்கலாம். இத்தைலத்தைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து அல்லது அப்படியே பூசி வரப் படர்தாமரை, அரைப்பத்து, தேமல் முதலிய சருமவியாதிகள் நீங்கும்.

தேங்காய்ப் பிண்ணாக்கை கருஞ்சீரகம் முதலிய சரக்குகளுடன் அரைத்து, உடம்பில் தேய்த்து குளித்துவரச் சருமவியாதிகள் நீங்கும். தல்ல. ஆனால் உணவிற்கு ஏற்றதல்ல. குணத்தின் கீழ்க்கண்ட நோய்களைப் பிறப்பிக்கும்.

குருத்து
இளங்குருத்து நாவிற்கு இதமானது. அதைத் தின்றால் கபத்தை நீக்கி இரத்தமூலத்தை நிறுத்தும்.

வேர்
இதைக் கஷாயம்/ குடிநீர் செய்து கருப்பை நோய்களுக்கு உள்ளுக்கு கொடுப்பதுண்டு.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction