free website hit counter

மூலிகை அறிவோம் - நீரிழிவிற்கு நிவாரணமாகும் நாவல்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீரிழிவிற்கு நிவாரணமாகும்  நாவல் பற்றி அறிவோம் 

தாவரவியல் பெயர் - Eugenia jambolana
குடும்பப் பெயர் -Myrtaceae
ஆங்கிலப் பெயர் - Black plum/ Jambol
சிங்களப் பெயர் - Madan/ Maha-dan
சமஸ்கிருதப் பெயர் - Jambu/ Rajphala
வேறு பெயர்கள் - சம்பு, நவ்வல், சாம்பல், சுரபிபத்திரை, நம்பு, சாதவம்

பயன்படும் பகுதிகள் எல்லாப் பகுதிகளும்

சுவை - துவர்ப்பு
வீரியம் - தட்பம்
விபாகம் - கார்ப்பு

வேதியியற் சத்துகள் பட்டையில் Tannin, gallic acid, bergenin ethyl gallate jambosine உண்டு.

பழத்தில் Anthocyanins, citric acid, malic acid, gallic acid, tannin, oxalic acid, glucose, fructose உண்டு.

விதையில் Tannin, ellagic acid, gallic acid, essential oil, myricyl alcohol உண்டு.

இலையில் Aliphatic alcohol, sitosterol, betulinic acid, crategolic acid உண்டு.

பூக்களில் Triterpenic acid, oleanolic acid, crategolic acid உண்டு


மருத்துவச் செய்கைகள்
Astringent - துவர்ப்பு
Antibacterial கிருமி கொல்லி
Antidysenteric சீதக்கழிச்சலடக்கி
Carminative- அகட்டுவாய்வகற்றி
Diuretic - சிறுநீர் பெருக்கி
Hypoglycemic- குருதி குளுக்கோஸ் மட்டத்தை குறைத்தல்
Stomachic- பசித்தீ தூண்டி
Tonic- உரமாக்கி

தீரும் நோய்கள்
வாய் நோய்
வளிநோய்
இருமல்
சளி
பெரும்பாடு
கரப்பான்
புண்
நீரிழிவு
நீர் வேட்கை குருதிக்கழிச்சல்
சுரம்
மாந்தம்
வெப்பம்
கடுப்பு

பயன்படுத்தும் முறைகள்
இதன் பட்டையை முறைப்படி குடிநீர் செய்து கொடுக்க நீரிழிவு, கழிச்சல் நீங்கும். வாய்ப்புண்ணிற்கு வாய் கொப்பளிக்க அவை உலரும்.

பட்டையை அரைத்து அடிபட்ட வீக்கம், கட்டி முதலியவற்றிற்கு போட அவை அமுங்கும்.

நாவற்பழத்தின் மேற்றோலை உண்ண நீர்ப்பெருக்கு, நீர் வேட்கை நீங்கும்.

நாவல் வேர் ஊறிய நீரினால் கழிச்சல், நீரிழிவு நீங்கும். உடலுக்கு குளிர்ச்சியையும் ஆண்மையையும் தரும்.

நாவற் கொழுந்து சிவனார் கிழங்கின் நஞ்சை முறிக்கும்; கழிச்சலைப் போக்கும்.

நாவற்கொழுந்தை ஏலத்துடன் சேர்த்தரைத்து ஆட்டுப் பாலில் கலந்து கொடுக்க செரியாக் கழிச்சல் போகும்.

நாவற்கொழுந்துச் சாறு, மாவிலைச் சாறு இரண்டையும் கலந்து கடுக்காய்ப்பொடியுடன் சேர்த்து, ஆட்டுப்பாலுடன் கொடுக்க சீதக்கழிச்சல் குணமாகும்.

விதையைத் தூளாக்கி வேளைக்கு 2-4 கிராம் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

இதன் தூளுடன் மாம்பருப்புத் தூளையும் சேர்த்துக் கொடுக்க சிறுநீரைப் பெருக்கும்.

குறிப்பு-
இதன் விதையை மிகுந்த அளவிலுண்ண நஞ்சாகும்.

நாவற்பழச் சாற்றைப் பிழிந்து ஒரு புட்டியில் ஒரு மாதம் வரையில் மூடிவைத்திருந்து அதன்பின் எடுத்துக் கொடுக்க நீரிழிவினால் உண்டாகும் நீர்வேட்கை தணியும்.

பழச்சாற்றை மணப்பாகு செய்து கொடுக்க பசியை உண்டாக்கும்; வயிற்றுப் போக்கை நிறுத்தும்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula