free website hit counter

மூலிகை அறிவோம் - கருப்பை உரமாக்கி- கருஞ்சீரகம்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மரணத்தைத் தவிர அனைத்து வியாதிகளையும் தீர்க்கக்கூடிய மாமருந்து.

இது இந்தியாவின் பலபாகங்களில் பயிர்செய்யப்படுகிறது.

தாவரவியல் பெயர்- Nigella sativa
குடும்பப் பெயர்- Ranunculaceae
ஆங்கிலப் பெயர்- Black cummin
சிங்களப் பெயர்- களுதுரு
சமஸ்கிருதப் பெயர்- கிருஷ்ண ஜீரக, பஸ்பிகா
வேறு பெயர்கள்- உபகுஞ்சிகை

 பயன்படும் பகுதி- விதை

சுவை- கைப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு

 வேதியியற் சத்துகள்-
Nigelline
Carvone
Cymene
Fatty acids
Palmitic acid
Myristic acid
Stearic acid
Oleic acid
Linoleic acid
Linolenic acid
Beta-sitosterol


 மருத்துவச் செய்கைகள் -
Anthelmintic- புழுக்கொல்லி
Antispasmodic- இசிவகற்றி
Carminative- அகட்டுவாய்வகற்றி
Diuretic- சிறுநீர் பெருக்கி
Emmenagogue- ருதுவுண்டாக்கி
Emolient- வரட்சியகற்றி
Galactogogue- பாற்பெருக்கி
Parasiticide- நுண்புழுக்கொல்லி
Stomachic- பசித்தீத்தூண்டி

 நோய் நிலைமைகள் -
மண்டை கரப்பான், புண், உட்சூடு, தலை நோய், கண்ணோய், சிரங்கு, வயிற்றுப் பொருமல், குன்மம், மார்புவலி, இருமல், வாந்தி, ஓக்காளம்,  வீக்கம்,  காமாலை


 பயன்படுத்தும் முறைகள் -
இதன் பொடியை அரிசி கழுவிய நீரில் கலந்து உட்கொள்ள குடலிலுள்ள புழுக்கள் வெளிப்படும். இதனை 3-7 நாட்கள் காலை 1/2 கிராம், மாலை 4 கிராம் வீதம் கொடுக்க விஷர்நாய்க்கடி, ஏனைய நச்சுக்கடிகளின் நஞ்சு முறியும்.

நொச்சிக் குடிநீருடன் இதன் பொடியை சேர்த்துக் கொடுக்க மேகப்பிடிப்பு, சுரம், விட்டு விட்டு வருகின்ற சுரம் தணியும்.

இதனை வெந்நீர் விட்டரைத்து தலைவலி, கீல்வீக்கம், உடல் வீக்கம் இவைகளுக்கு மேற்பூச்சாய் பூச குணமடையும்.

இதனை அரிசி கழுவிய நீருடன் சேர்த்து புடை காயங்களுக்கு பூசலாம்.

தேன் விட்டரைத்து பிள்ளை பெற்ற பின் வரும் வலிக்குப் பூசலாம்.

இதனை ஆற்றுத்தும்மட்டிச் சாறு விட்டரைத்து இரு பக்க விலாக்களிலும் பூச குடலிலுள்ள புழுக்கள் வெளிப்படும்.

இதனை அரைத்து நல்லெண்ணெயில் குழப்பி கரப்பான், சிரங்கு போன்றவற்றிற்கு பூசலாம்.

பொடியை தேன் அல்லது நீரில் கலந்து கொடுக்க மூச்சு முட்டல் நீங்கும். மோருடன் கலந்து கொடுக்க விடா விக்கல் தீரும்.

சூதகக்கட்டு, சூதகச் சூலை இவைகளுக்கு 1 -3 கிராம் கொடுக்கலாம்.

காலையில் 3-7 விதைகளை தேனுடன் உள்ளெடுக்க கருப்பை தொடர்பான அனைத்து வியாதிகளையும் தீர்க்கக் கூடியது.

இதன் தீநீர் அல்லது தைலத்தை முகர்ந்தாலும் பூசினாலும் கபத்தாலுண்டாகும் தலைநோய், மூக்கு நீர் வடிதல், நரம்பைப் பற்றிய வலி, இடுப்பு வலி நீங்கும்.

குறிப்பு- அதிக அளவில் உள்ளெடுப்பதை தவிர்க்க.

இயற்கையின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வோமாக!

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction