free website hit counter

சமுத்திரங்களின் வெப்ப அதிகரிப்பு தொடர்பான NOAA கணிப்பு

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சர்வதேச சமுத்திர மாதமாக ஜூன் கொண்டாடப் பட்ட நிலையில் பூமியின் சமுத்திரங்களில் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஆய்வு

நாம் வாழும் இப்பூமி 70% வீதம் சமுத்திரங்களால் ஆனது. எனவே சமீப கால மனித நடவடிக்கைகளால் அதிகரித்து வரும் பச்சை வீட்டு விளைவு (Green House Effect) வாயுக்கள் பூமியின் நிலப்பரப்பையும், வளி மண்டலத்தையும் மாத்திரமன்றி சமுத்திரங்களையும் சூடாக்கி வருவது நம் கண் முன்னே நிகழ்வதாக நாசா விண்வெளி ஆய்வு மையமும், NOAA எனப்படும் உலகளாவிய சமுத்திர ஆய்வு அமைப்பும் கவலை தெரிவித்துள்ளன.

அதாவது இன்று நிலவி வரும் பூகோள வெப்பமயமாதலில் 90% வீதத்தை சமுத்திரங்கள் உறிஞ்சுவதால் அவையும் வெப்ப மயமாகி வருகின்றன. 1955 ஆமாண்டு முதல் இது அவதானிக்கப் படுகின்றது. இதில் கடந்த 2023 ஆமாண்டு உலகளாவிய சமுத்திரங்களின் வெப்ப நிலை அதிகரிப்பே மிக அதிகமானது என்று கணிப்பு வெளியாகி இருப்பது அதிர்ச்சியளிக்கின்றது. இது தொடர்பாக 2023 ஆமாண்டு ஆகஸ்ட் மாதம் எடுக்கப் பட்ட ஆய்வுப் புகைப் படத்தையும் NOAA வெளியிட்டுள்ளது.

இதில் சிவப்பு மற்றும் ஆரெஞ்சு நிறங்கள் சமுத்திரங்களது சாதாரண வெப்ப நிலையை விட அதிகமாக இருப்பதையும், நீல நிறத்தில் இருப்பது குளிர்மையையும் காண்பிக்கின்றது. வியப்பூட்டும் விதமாக கிழக்கு பசிபிக் சமுத்திரத்தில் சமுத்திரத்தின் வெப்ப நிலை  அதிகரிப்பை சித்தரிக்கும் சிவப்பு, ஆரெஞ்சு நிறங்கள் எல் நினோ (El Nino) விளைவு என்றும் இதனால் தான் பூமியில் எதிர்பாராத காலநிலை வேறுபாடுகளும், இயற்கை அனர்த்தங்களும் திடீரென நிகழ்வது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

1992 ஆமாண்டு முதல் உலகளாவிய கடல் மட்டம் இதுவரை 4 இஞ்ச் அதாவது 101 மில்லிமீட்டர் அதிகரித்துள்ளது. இதனால் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுவது அதிகரித்தும், சிறிய தீவுகள் கடலில் மூழ்கிட அல்லது கடலோர நகரங்களை சுனாமி போன்ற பெரும் வெள்ளங்கள் தாக்கிடவும் வாய்ப்புக்கள் கூடியுள்ளன. மேலும் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் உலகளாவிய சமுத்தரங்களில் கடல் நீரின் மேல்மட்ட வெப்ப நிலை 0.99 பாகை டிகிரிக்கள் அதிகரித்துள்ளது. இதனை கடலுக்கு ஏற்பட்டிருக்கும் சிறு காய்ச்சல் என்றும் ஒப்பிடுகின்றனர் NOAA விஞ்ஞானிகள்.

Source : NASA

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula