பூமிக்கு இப்போது 2083 வரை "இரண்டு நிலவுகள்" இருப்பதாக நாசா உறுதிப்படுத்துகிறது.
ஒரு சிறிய சிறுகோள் பூமியுடன் ஒத்திசைவில் சுற்றி வருவதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது. ஹவாய் பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிறுகோள் "குவாசி-மூன்" (quasi-moon) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருஅரிய வகையான விண்வெளிப் பொருளாக கருதப்படும் இந்நிலவு பூமியின் சுற்றுப்பாதையுடன் கிட்டத்தட்ட சரியான ஒத்திசைவில் உள்ளது.
2025 PN7 என அழைக்கபடும் இந்நிலவு வானியலாளர்களின் கூற்றுப்படி, 60 முதல் 118 அடி அகலம் வரை இருக்கும் எனவும் நமக்கு நன்கு தெரிந்த மற்ற கிரகப் பொருட்களுடன் ஒப்பிடும்போது, சிறியது எனப்படுகிறது.
முதலில் நட்சத்திரங்களின் நடுவில் ஒரு சிறிய நகரும் புள்ளியாக இருந்ததையும் பின்னர் சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் சுற்றுப்பாதையுடன் கிட்டத்தட்ட சரியான வேகத்தில் இருப்பதை தொலைநோக்கி ஆய்வு வெளிப்படுத்தியதை கண்டுபிடித்துள்ளனர்.
2025 PN7 சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு பூமியுடன் ஒத்திசைக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நுழைந்ததாக நம்பப்படுகிறது, மேலும் இது 2083 வரை இந்தப் பாதையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே அடுத்த முறை நீங்கள் நட்சத்திரங்களைப் பார்க்கும்போது, பூமியின் சுற்றுப்பாதையுடன் இப்போது ஒரு சிறிய நண்பர் இணைந்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
