free website hit counter

எமது பிரபஞ்சம் 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன்பு தோன்றியது என எப்படி எமக்குத் தெரியும்?

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எமது பிரபஞ்சத்தின் வயது அல்லது அது 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன்பு தோன்றியது என்பது எப்படி எமக்குத் தெரியும்?

நம்மால் கடந்த காலத்தைப் பார்க்க முடியுமா? என்பது வானவியல் பயில ஆரம்பிக்கும் அனைவருக்கும் இயல்பாகவே தோன்றக் கூடிய கேள்வி. இதற்கான பதில் என்ன? இதற்கு முதலில் வானத்தை அவதானிக்க நாம் உருவாக்கி வைத்திருக்கும் தொலைக் காட்டிகள் அனைத்தும் கால இயந்திரத்துக்கு இணையானவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் எமது கண்கள் கூட கால இயந்திரம் தான்.

அதனால் தான் ஒளி அல்லது வெளிச்சமானது எல்லைக்குட்பட்ட ஒரு வேகத்தைக் கொண்டிருக்கின்றது. நீங்கள் நிலவைப் பார்த்தால் அது ஒரு செக்கனுக்கு முன்பு எப்படி இருந்ததோ அவ்வாறு தான் தென்படும். இதுவே சூரியனை நீங்கள் பார்த்தால் அது 8 நிமிடங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒளியைத் தான் நீங்கள் பார்க்கின்றீர்கள். ஒளியின் வேகம் வெற்றிடத்தில் எப்போதும் எது சார்பாகவும் ஒரு மாறிலி ஆகும். இதன் அளவு ஒரு செக்கனுக்கு 299 792 458 மீட்டர் அல்லது 299 792 458 m/s ஆகும்.

வெற்றிடம் ஒன்றில் ஒளியின் வேகம் (speed of light) என்பது இயற்பியலில் ஒரு அடிப்படை மாறிலி. இது பொதுவாக "c" என்னும் ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது. கட்டற்ற வெளியில் (free space), கண்ணுக்குப் புலப்படும் கதிர்வீச்சு உட்பட எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகளினதும் வேகம் இதுவே. ஓய்வுத்திணிவு பூச்சியமாக உள்ள எதனதும் வேகமும் இதுவேயாகும்.இரவு வானில் நீங்கள் சிரியஸ் நட்சத்திரத்தை அவதானித்தால் அது 8 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ அந்த தோற்றத்தைத் தான் நீங்கள் காண்பீர்கள். இதே எமது பால்வெளி அண்டத்துக்கு அண்மையில் உள்ள அண்ட்ரோமிடா அண்டத்தை நீங்கள் வானில் அவதானித்தால் அது 2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்த தோற்றத்தைத் தான் நீங்கள் காண்பீர்கள். ஆனால் பூமியில் மனித இனம் 2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோற்றம் பெற்று விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரி இனி விடயத்துக்கு வருவோம். இதுவரை தெரிவித்த விடயங்களின் படி நாம் கடந்த காலத்தைப் பார்க்க முடியும் என்பதை உணர்ந்திருப்பீர்கள். இதனை நாம் எப்போதும் செய்து கொண்டே தான் இருக்கின்றோம். வித்தியாசம் என்னவென்றால், எமது பூமியில் நாம் வெறும் நேனோ விநாடிகள் வித்தியாசமே கொண்ட கடந்த காலத்தைத் தான் பார்ப்போம். இதுவே விண்வெளியானால் அதன் பரந்த தன்மை காரணமாக பில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்த நிலையைக் கூட நாம் பார்க்க முடியும்.

இறுதியான விளக்கம் என்னவென்றால், இந்த அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு நாம் விண்வெளியில் எமது சக்தி வாய்ந்த தொலைக் காட்டிகள் மூலம், பிரபஞ்சத்தில் காணப் படும் வயதான அண்டங்களையும், சூப்பர் நோவாக்களையும் திருத்தமாக நோக்கியும், அளவிட்டும், அந்த விபரங்களை அடிப்படையாகக் கொண்டு எமது கண்ணுக்குப் புலப்படும் மிகவும் பழமையான ஒளிக்கதிர்களை இனம் கண்டுள்ளோம். இந்த மிகவும் பழமையான ஒளிக் கதிர்கள் இன்றும் பிரபஞ்சம் முழுதும் விரவியிருக்கும் பிரபஞ்ச நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சில் (Cosmic microwave background radiation - CMBR) இலிருந்து வெளிப்படுவை ஆகும்.

இந்த CMBR ஆனது பிரபஞ்சம் தோன்றி எப்போது ஒளியை உமிழத் தொடங்கியதோ அப்போதிருந்து எமது விண்வெளியில் காணப் படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் இதனை அடிப்படையாகக் கொண்டு எமது பிரபஞ்சத்தின் வயதை நாம் 13.8 பில்லியன் வருடங்கள் என ஊகித்துள்ளோம். இதற்கு உதவும் முக்கிய கண்டுபிடிப்பு ஹபிளின் விதி (Hubble's law) ஆகும். இந்த விதியானது பூமியில் இருந்து அண்டங்கள் எவ்வளவு தொலைவில் உள்ளதோ அந்தளவுக்கு அவை பூமியில் இருந்து விலகிச் செல்லும் வேகத்தின் அதிகரிப்பு கூடுதலாக இருக்கும் என்று கூறுகின்றது.

நன்றி, தகவல் - Quora

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction