free website hit counter

எம்.எஸ். தோனி தயாரிப்பில் உருவான எல்.ஜி.எம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சினிமா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள LGM திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நதியா, இவானா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நதியாவும் காதலியாக இவானாவும் நடித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பாக இந்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கள் அடுத்தடுத்து வெளியானது. அதன் பிறகு இப்படத்தின் டிரைலரை எஸ் தோனி மற்றும் சாக்ஷி சிங் தோனி இருவரும் இணைந்து சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடைய நல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலும் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'எல்.ஜி.எம்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction