free website hit counter

றொட்டடாமில் புலி விருது வென்றது Rei ஜப்பானியத் திரைப்படம்

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

றொட்டடாம் சர்வதேச திரைப்பட விழாவின் 53வது பதிப்பான 2024ம் ஆண்டுப் போட்டிகளில், ஜப்பானியத் திரைப்படமான, தனகா தோஷிஹிகோவின் Rei படம், IFFR இலட்சினையான  (Tiger Award)  'புலி விருது' மற்றும் விருதுக்கான பரிசுத் தொகை 40 ஆயிரம் ஈரோக்களையும் வென்றது.

Tiger Award போட்டிப் பிரிவில் போட்டியிட்ட 14 திரைப்படங்களில், இந்தியத் திரைப்படமான மிதுன் முரளியின் Kiss Wagon படம்,  Special Jury Award  நடுவர்களின் சிறப்பு விருதினையும், விருதுக்கான 10 ஆயிரம் ஈரோக்கள் பரிசுத் தொகையினையும், கூடவே சர்வதேச திரைப்பட பத்திரிகையாளர்களின் நடுவர் மன்றம் வழங்கிய, FIPRESCI Award ஃபிப்ரெஸ்கி விருதினையும் வென்றது.

இப் பிரிவில் மற்றுமொரு நடுவர்களின் சிறப்பு விருதினையும், 10 ஆயிரம் ஈரோக்களையும், ஆஸ்திரேலியாப் படமான பிளாட்ஹெட் (Flathead) வென்றது.

இத் திரைப்படவிழாவின் மற்றுமொரு பிரிவான பெருந்திரைப் போட்டியில் (Big Screen ) ஈரானியத் திரைப்படமான The Old Bachelor விருதினையும், 30 ஆயிரம் ஈரோக்கள் பரிசுத் தொகையையும், நெதர்லாந்து சினிமா அரங்குகளில் திரையிடலுக்கான வணிக ஒப்பந்தத்தையும் பெற்றது.

றொட்டடாம் திரைப்படவிழாவின் Bright Future பிரிவில், ஆசிய சினிமாவை மேம்படுத்துவதற்கான அமைப்பின்  நடுவர் குழுவால் சிறந்த ஆசிய திரைப்படத்திற்காக வழங்கப்பெற்ற NETPAC சிறப்பு விருதினை,  இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி கூட்டுத் தயாரிப்பான, இஷான் சுக்லாவின் Schirkoa: In Lies We Trust வென்றது.

இத் திரைப்படவிழாவின் குறும்படப்பிரிவில் போட்டியிட்ட, 21 படங்களில்,   Crazy Lotus  (கிரேஸி லோட்டஸ் - தாய்லாந்து),  Few Can See (ஃபியூ கேன் சீ -அயர்லாந்து) மற்றும் Workers’ Wings (வேர்க்கர்ஸ் விங்ஸ் -கொசோவோ) ஆகிய மூன்று படங்களும் குறும்படங்களுக்கான புலி விருதினையும், ஒவ்வொன்றும் 5,000  ஈரோக்களையும் வென்றுள்ளன. இத் திரைப்படவிழாவின் பார்வையாளர் தெரிவில் வெற்றிபெறும் படம் நாளை அறிவிக்கப்படும்.

றொட்டடாமிலிருந்து 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction