லொகார்னோ 75 சர்வதேசத் திரைப்படவிழாவில் நேற்றைய (08.08.2022) தினம் பியாற்சே கிரான்டே பெருமுற்றத்தின் அரங்கில் சிறப்பு விருது பெறும் இந்தியப் பெண் படைப்பாளியாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக கீதாஞ்சலி ராவ் பெருமை சேர்த்தார்.
Gitanjali Rao was honored as the Locarno Kids Award recipient at the Locarno 75 International Film Festival
Indian Creative Woman Director and producer Gitanjali Rao was honored as the Locarno Kids Award recipient at the Locarno 75 International Film Festival yesterday (08.08.2022) at Piazza Grande.
இவரது தயாரிப்பிலும், நெறியாள்கையிலும் உருவான அசைபடமான (Printed Rainbow - animation) ' அச்சிடப்பட்ட வானவில்' பியாற்சா கிரான்டே பெருந்திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. 35MM படைப்பான இந்த அசைப்படம், பெருந்திரையில் சிறப்பான வேறு ஒரு அனுபவத்தை தரும் என்கின்ற அவரது எதிர்பார்ப்பினை மெய்ப்பித்து, பார்வையாளர்களைக் கவர்ந்து கொண்டது.
படத்தின் திரையிடலுக்கு முன்னதாக, இத் திரைப்படம் குறித்த அறிமுகத்தின் போது, இத் திரைப்படவிழாவின் கலை இயக்குனரான Giona A. Nazzaro பேசுகையில், தான் சார்ந்த கலாச்சாரத்தின் வழியில், தனித்துவமான கலைவெளிப்பாட்டுத் திறனுடன், உலகத்திற்குப் பொதுவான செய்தி சொல்லும் நெறியாள்கையாக இந்தத் திரைப்படம் முக்கியத்துவம் பெறுவதாகக் குறிப்பிட்டார்.
அரங்குக்கு அழைக்கப்பெற்றதும், இந்தியக் கலாச்சார ஆடையான சேலையுடனும் கரங்கூப்பிய வணக்கத்துடனும், மேடையில் தோன்றிய கீதாஞ்சலி ராவ்வினை நிறைந்த கரவொலியுடன் பெருமுற்றம் வரவேற்றுக் கொண்டது.
மேடையிலும், பிரத்தியேக நேர்காணலிலும், அவர் தனக்குக் கிடைத்த விருது குறித்துப் பேசுகையில், " இது ஒரு முழுமையான மரியாதை. இதுவரை ஒற்றைப் படங்களுக்கு மட்டுமே விருதுகள் வாங்கி வருகிறேன். ஆனால் இளம் பார்வையாளர்களை ஊக்குவிக்கிறது என்பதனாலும், எனது ஒரு படத்திற்காக அல்லாது எனது மொத்த உடல் உழைப்புக்காகவும் தரப்படும் விருது என்பதனால் ஒரு நல்ல உணர்வைத் தருகிறது" எனக் குறிப்பிட்டார்.
அவரது பிரத்தியேகச் செவ்வியொன்றில், " இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஐரோப்பாவில் குழந்தைகளின் பார்வை மிகவும் வித்தியாசமானது. அங்கே, குழந்தைகள் அமெரிக்க கார்ட்டூன்களைப் பார்க்கப் பழகிவிட்டார்கள், இந்திய அனிமேஷனில் அதிகம் நாட்டம் கொள்வதில்லை. ஆனால் ஐரோப்பாவில், தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக திரைப்பட ஆய்வுகள் அமைவதனால், குழந்தைகள் அனிமேஷனை சினிமா வடிவமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் அதை பொழுதுபோக்காக மட்டும் பார்க்கவில்லை. " எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், " நான் இங்கு இருக்கும்போது, உங்கள் இளம் பார்வையாளர்கள் சிறு குழந்தைகளைப் போல் சிந்திக்கவில்லை, முதிர்ந்த பெரியவர்கள் போல் சிந்திக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். லோகார்னோ கிட்ஸ் நடுவர் மன்றத்தின் தீர்ப்பைப் பார்த்தேன், ஆச்சரியமாக இருக்கிறது. ஐரோப்பாவில் நான் சென்ற ஒவ்வொரு திருவிழாவிலும், இளைஞர்கள் அனிமேஷனை மிகவும் முதிர்ந்த பார்வையுடன் பார்ப்பதை நான் கவனிக்கிறேன். " எனவும் குறிப்பிட்டார்.
அவரது கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக இருந்தது, இந்த விழாவின் சிறுவர்களுக்கான பயிற்சிப்படறையில், பயின்ற ஒரு சிறுமியின் அனுபவப் பகிர்வு உரை. பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மிகச் சரளமாக தனது அனுபவத்தை தடங்கலின்றி வெளிப்படுத்தினாள் அக் குட்டிப் பெண்.
" எனக்கு ஓவியம் பிடிக்கும் என்பதாலும், ஒவியக் கலை படித்தேன் என்பதாலும், திரைப்படங்களை உருவாக்க அனிமேஷனைத் தேர்வுசெய்தேன். என் கதையைச் சொல்ல என் ஓவியங்களை நகர்த்தினேன், நான் அதைச் செய்துகொண்டே இருந்தேன், சில காலத்திற்குப் பிறகு சினிமாவைப் பற்றி நான் விரும்பிய அனைத்தையும் அனிமேஷனில் கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்தேன். இது மிகவும் கலைநயமிக்கதாக, கனவுகள், கற்பனைகள், கற்பனைகள் போன்றவற்றை அனிமேஷனில் செய்ய நிறைய இருக்கிறது, ஒரு வாழ்நாள் போதாது என்பதால் நான் அதை தொடர்ந்து பயன்படுத்துகிறேன் " என அவர் தனது எண்ணத்தை நிறைவு செய்கின்றார்.
இந்தியத் திரையுலகம் சார்ந்த பலரும், வணிக சினிமாவினையே தமது நோக்காகக் கொண்டிருக்கையில், இயக்குனர் கீதாஞ்சலி ராவ், இந்தியக் கலைகள் சார்ந்து தனது சினிமாவினை தேர்வு செய்வது பாராட்டுக்குரியது. லொகார்னோவில் அவருக்குக் கிடைத்த (Locarno Kids Award ) லொகார்னோ சிறுவர் விருது சிறப்புக்குரியது. அந்தச் சிறப்புக்குரிய நம்பிக்கைப் பெண்ணாக திகழ்கின்றார் இயக்குனர் கீதாஞ்சலி ராவ்.
- 4தமிழ்மீடியாவிற்காக லொகார்னோவிலிருந்து மலைநாடான்
படங்கள் நன்றி : ©Locarno Film Festival
காட்சிப்படுத்தப்பட்ட Printed Rainbow அசைபடம் :
தனது அசைபடங்கள் குறித்த ஆர்வம், கற்றல் குறித்த gitanjali-rao அவர்களின் விரிவான செவ்வி.
Director and producer Gitanjali Rao was honored as the Indian Creative Woman Award recipient at the Locarno 75 International Film Festival yesterday (08.08.2022) at Piazza Grande.
The ``Printed Rainbow" - animation film produced and edited by her was screened in giant screen of Piazza Grande.The motion picture, a 35MM creation, lived up to her expectations of giving the giant screen a unique experience and captivated the audience.
During the introduction of the film, Giona A. Nazzaro, the artistic director of the film festival - mentioned that this film is becoming important as a common message to the world with unique artistic expression in the way of his own culture.
On being invited to the arena, Gitanjali Rao appeared on the stage dressed in the Indian cultural dress of saree has garbed to a standing ovation.
Speaking on stage and in an exclusive interview, Gitanjali Rao said about the award, "It's a complete honor. So far, I've only received awards for single films. But it feels good because it inspires the young audience and it's not just for one film but for my whole body of work."
In one of her exclusive interviews, she mentioned that "The view of children in Europe is very different compared to India.
There, children are used to watching American cartoons and are not much into Indian animation. But in Europe, with film studies as part of their culture, children see animation as a form of cinema. They don't see it as just entertainment"
She further said, "While I'm here, I know that your young audience isn't thinking like little kids, they're thinking like mature adults -I saw the decision of the Locarno Kids jury, and it's amazing. At every festival I've been to in Europe, I notice that young people look at animation with a more mature perspective - she also mentioned
An experience sharing speech by a girl who attended the workshop for children of this festival vindicated her claim. In front of tens of thousands of fans, the little girl eloquently expressed her experience without interruption.
"I chose animation to make movies because I love drawing and studying graphic illustration. I moved my drawings to tell my story, and I kept doing it, and after a while I realized that I could bring everything I loved about cinema into animation. - It's very artistic, dreams of imagination, there's a lot to do in animation, and I continue to use it because one lifetime is not enough," she concludes her thoughts.
While many people from the Indian film industry are aiming for commercial cinema, director Gitanjali Rao's choice of cinema based on Indian arts is commendable. The Locarno Kids Award she received in Locarno is special and Director Gitanjali Rao as that special woman of faith.
- Malainaadan from Locarno for 4Tamilmedia
Images courtesy: ©Locarno Film
Printed Rainbow animation film
Gitanjali-rao's detailed answer about her passion for still life animation and learning.