free website hit counter

உறுதியாகிறது ‘விண்ணைத் தாண்டி வருவாயா - 2’

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் என்றாலே போலீஸ் கதைகளைத் திரைப்படமாக எடுப்பதில் கில்லாடி என்று காட்டினார். அதேபோல் போலீஸ் வேடங்களிலும் தற்போது அதிகமாக நடித்துவருவதால் நெட்டிசன்கள் அவரை ‘கௌதம் மேனன் ஐபிஎஸ்’ என்று ட்ரோலும் செய்தனர்.

ஆனால், அதற்கு எதிரணியில் நிற்கும் பல நெட்டிசன்கள் ‘கௌதம் மேனனின் உண்மையான் அடையாளம் காதல் கதைகள்தான். அவருடைய போலீஸ் கதைகளிலும் காதல் கதைகளைப் பார்க்கலாம்’ என்று அவரது காதல் கதைகளை ஆதரித்து வருகின்றனர்.

இதனால் 10 வருங்களுக்கு முன் இயக்கத்தில் சிம்பு - திரிஷா நடிப்பில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தை ஒரு காவியமாகவே நினைவு கூர்ந்து நெட்டிசன்கள் எழுதி வருகின்றனர்., இதைத் தொடர்ந்து ‘விண்ணைத் தாண்டி வருவாயா 2’எடுக்க கௌதம் மேனன் திரைக்கதை எழுதினார். அந்தத் திரைக்கதையிலிருந்து ஒரு காட்சியை கடந்த முதல் அலைக் கொரோனாவின் போது குறும்படமாகவும் எடுத்தார்.

இதற்கிடையில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா 2’ படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசுக்கும் கௌதம் மேனனுக்கும் முடிக்கொண்டது. இதனால் இந்தப் படத்தை கௌதம் மேனன் கைவிடுவதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால், தற்போது இயக்குநர் - தயாரிப்பாளர் இருவருக்கும் இடையில் பஞ்சாயத்து பேசி, சுமூகமாக முடிந்துவிட்டதாகவும் இரண்டாம் தவணை முன்பணத்தை கௌதம் மேனனுக்குக் கொடுத்துவிட்டதாகவும் விரைவில் அறிவிப்புடன் ‘விண்ணைத் தாண்டி வருவாயா - 2’படத்தை உறுதிப்படுத்த இருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநாடு படத்தை தொடர்ந்து ‘விண்ணைத் தாண்டி வருவாயா - 2’ படத்தில்தான் நான் அடுத்து நடிக்கப்போகிறேன் என்று சிம்பு இன்னும் சில தினங்களில் சிம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிக்க இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. அதேநேரம், மாநாடு படத்தின் ‘விமானப் பயணம் மேற்கொள்ளும் காட்சி’ ஒன்று மட்டும் டப்பிடிப்பு மீதம் இருப்பதாக தெரிகிறது.

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction