free website hit counter

விமல் நடித்த ‘விலங்கு’!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஓடிடி தளங்களில் ஜீ5 தொடர்ந்து தரமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக ஆட்டோ சங்கர், பிங்கர் டிப், க.பெ.ரணசிங்கம், மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம், பிளட் மணி, முதல் நீ முடிவும் நீ உட்பட பல ஓடிடிக்காகவே தயாரான பல ஒரிஜினல் படங்களை வெளியிட்டு கவனம் ஈர்த்தது. தற்போது, இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல் நாயகனாக நடித்துள்ள ‘விலங்கு’ என்ற ஒரிஜினல் இணையத் தொடரை, ஃபிப்ரவரி 18, 2022 வெளியிடவுள்ளது.

7-எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக குற்றக்கதை வகையில் உருவாகியுள்ளது, இத்தொடரில் திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் பரிதி என்ற பாத்திரத்தில், கதாநாயகனாக விமல் நடித்துள்ளார். இனியா, முனிஷ்காந்த், பால சரவணன் ஆகியோருடன் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். விலங்கு தொடரை இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.

இதன் கதை திருச்சியில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது, எளிய காவலர்களின் வாழ்க்கையை சொல்வதோடு, அவர்களின் உணர்வுபூர்வமான பக்கத்தையும் சொல்வதாக அமைந்துள்ளது. ஒரு மர்மமான வழக்கை, விமல் விசாரிக்க ஆரம்பிக்கிறார் அதில் ஏற்படும் திருப்பங்களே இந்த தொடர். நகைச்சுவை குணச்சித்திரம் இரண்டிலும் கவனிக்க வைக்கும் விமல், இணையத் தொடரிலும் தனது தனித்தன்மையை தக்கவைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction