அரசியல்வாதிகளின் வாழ்க்கையை வளப்படுத்த, தேர்தலில் வெற்றிபெற வியூகம் வகுத்துக் கொடுத்தே பெரும் பணம் சம்பாதித்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கார்பரேட் மார்க்கெட்டிங் நிபுணரான பிரசாந்த் கிஷோர்.
அவரது வாழ்க்கைக் கதையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் முதலாளியான உதயநிதி ஸ்டாலின் வெப் சீரிஸ் தொடராக எடுக்கவிருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிகின்றன.
ஆனந்த விகடன் பத்திரிகையில் பணியாற்றி அங்கிருந்து உதயநிதியின் ஆலோசகரா தற்போது பணியில் இருக்கும் முன்னாள் பத்திரிகையாளர் ஒருவரின் திரைக்கதை இயக்கத்தில்தான் இந்தத் தொடர் தயாராக இருக்கிறது. இதில் பிரசாந்த் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
விஜய்சேதுபதிக்கு நல்ல ஊதியம் தர ஒப்புக்கொண்டிருப்பதால், திரைக்கதையை ஒருமுறை படித்துவிட்டு ஓகே சொல்கிறேன் என்று கூறியிருக்கிறாராம். இதுவொருபக்கம் இருக்க இதே பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கைக் கதையை ஷாருக் கான் தனது நிறுவனமான 'ரெட் சில்லிஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் எடுக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியான நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சரின் மருமகன் இதில் தலையிட்டு இந்த டீலை முடித்துவிட்டதாகவு விரைவில் அதிகாரபூர்வ அறிப்பு வரும் என்று கூறுகிறார்கள்.
-4தமிழ்மீடியாவுக்காக:மாதுமை