free website hit counter

விஜய்யின் பிறந்த நாளில் தளபதி 65 படத்தின் முதல் தோற்றம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்’ திரைப்படம், முதல் அலை கொரோனா முடிவடைந்த நேரத்தில் வெளியாகி வெற்றிபெற்றது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் டிவி தயாரிப்பில் இன்னும் தலைப்பு சூட்டப்படாத தன்னுடைய 65-வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்துக்கு ‘டார்கெட்’ என்ற தலைப்பை படக்குழு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் அலை கொரோனா இந்தியாவில் தொடங்கும்முன் இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் ஐந்து நாட்கள் மட்டும் படமாக்கப்பட்டன. இந்நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் முதல்தோற்றம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு தினம் முன்னதாகவே அதாவது ஜூன் 21-ஆம் தேதி மாலை 6 மணிக்கு முதல்தோற்றம் வெளியாக 99% வாய்ப்பிருப்பதாக விஜய்யின் மக்கள் தொடர்பாளர் வட்டாரத்திலிருந்து தகவல் கசிகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகலாம்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: