free website hit counter

அப்பா மம்மூட்டியிடம் தோற்றுப்போன மகன் துல்கர்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிறந்த நடிப்புக்காக 4 முறை தேசிய விருதுபெற்ற ஒரே தென்னிந்திய நடிகர் மம்மூட்டி!

மலையாளம் தாண்டி இந்தியா முழுவதும் ரசிகர்களைக் கொண்ட உச்ச நட்சத்திரம். அந்த அளவுக்கு பிறமொழிப் படங்களில் அதிகமாக நடித்தவர். மலையாள சினிமாவின் சொத்து மம்மூட்டி என்றுகூட சொல்லிவிடலாம்.

மம்மூட்டி மலையாள வாசனையுடன் தமிழ் பேசும் அழகே தனிதான். தமிழில் அவர், மறுமலர்ச்சி. அழகன், தளபதி, மெளனம் சம்மதம், ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் கோலிவுட்டிலும் ஒரு ஸ்டாராக வலம் வருபவர். தளபதி படத்தில் மம்மூட்டி நடித்த தேவா கதாபாத்திரம், பல தமிழ் ரசிகர்களின் என்றைக்கும் நினைவு கூறப்படும் ஒன்று!

அப்படிப்பட்ட அற்புத நடிப்பாற்றல் கொண்ட மம்மூட்டி, சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைந்துவிட்டன. இந்நிலையில், யாரும் நம்பமுடியாத இளமைத் தோற்றத்துடன் தன்னையும் தன் மனதையும் தூய்மையாக வைத்துக்கொள்ளும் இந்தக் கலைஞனுக்கு, கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி அன்று 70 வது பிறந்தநாள். மம்மூட்டியின் பிறந்தநாளில் அவரது திரையுலக சகாக்களும் ரசிகர்களும் வாழ்த்துமழை பொழிந்தனர். அவற்றில் முத்தாய்ப்பாக அவரது மகன் துல்கர் சல்மானின் சமூக வலைதளப் பதிவு வைரலாகியுள்ளது. தனது தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் அவரது பதிவில், “நான் விட்டுக் கொடுத்து விடுகிறேன்! உங்களுடன் ஒருவர் ஒரே ஃப்ரேமில் நிற்கும்பொழுது அங்கு தான் இருப்பதை நியாயப்படுத்த முயற்சி செய்ய முடியுமா..? நான் எப்போதும் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் நான் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா.. நீங்கள் வழக்கம்போல உங்களது வயதினை தலைகீழாக கணக்கு எழுத துவங்குங்கள்” என்று குறிப்பிட்டு தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction