free website hit counter

ஊடகங்களை வைத்துச் செய்யும் சூர்யா - ஜோதிகா தயாரித்துள்ள ‘ரா ரா’

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எளிய கிராமத்து மக்களின் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் சித்தரித்துள்ள யதார்த்தத் திரைப்படம் 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்'.

தங்களது 2டி நிறுவனத்தின் மூலம் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலரை இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) சூர்யா வெளியிட்டார். படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பிரத்யேக காட்சி, செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி, 240 நாடுகளிலும் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதில் பிக் பாஸ் 4 புகழ் ரம்யா பாண்டியன், வாணிபோஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆர்யாவின் அரண்மனை-3 படத்திலிருந்து 'ரசவாச்சியே' பாடல்!

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்‘ படத்தின் ட்ரைலரில், ஒட்டுமொத்த இந்தியாவும் அதன் இதய பகுதியாக திகழும் கிராமம் ஒன்றை உற்று நோக்குகிறது. அங்கு 35 வயதான குன்னிமுத்து என்ற விவசாயி, தன் மனைவி வீராயி என்பவருடன், காணாமல் போன தன்னுடைய பெற்றெடுத்த பிள்ளைகளைப் போல் வளர்த்த கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு காளைகளை தேடுகிறார்கள். இதற்கான தேடலில் அவர்கள் ஈடுபட்டிருக்கும்போது உள்ளூர் காவல் துறையினரும், அரசியல்வாதிகளும் தங்களுக்கான நடவடிக்கைகளில் இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதன் போது ஏற்படும் சுவாரசியமான மற்றும் எதிர்பாராத திருப்பங்களை நகைச்சுவை ததும்ப சொல்லும் வகையில் கதை பயணிக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன் கூட்டணி!

படத்தைப் பற்றி இயக்குனர் அரிசில் மூர்த்தி ‘ இந்த திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமானது. இதயப்பூர்வமான கதையை உயிர்ப்புடன் திரையில் கொண்டுவர படத்தில் பணியாற்றிய நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சோர்வின்றி உழைத்தனர். படத்தில் கதையின் நாயகனான குன்னிமுத்துவின் தேடலில் அனைவருக்கும் பொதுவான உணர்வு பதுங்கி இருப்பதாகவே கருதுகிறேன். இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாவதால் சர்வதேச பார்வையாளர்களை சென்றடையும். இதனால் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும் இப்படத்தை உருவாக்கும்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சியைப் போலவே, அவர்களும் இப்படத்தைக் காணும்போது சந்தோசமடைவார்கள் என நம்புகிறேன்.' என்றார்.

தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா பேசுகையில்,' ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் முன்னோட்டத்தை பார்வையாளர்களுக்காக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எளிய மனிதர்களின் வாழ்க்கையில் இடம்பெறும் நகைச்சுவையுடன் கூடிய மனித நேய உணர்வு சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக நாங்கள் அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction