free website hit counter

ஆர்யாவின் அரண்மனை-3 படத்திலிருந்து 'ரசவாச்சியே' பாடல்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி.

இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் ,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் . அரண்மனை முதல் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா நடிப்பில் அரண்மனை 3 திரைப்படம் உருவாக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க C.சத்யா இசையமைக்கிறார் .

அரண்மனை மூன்றாம் பாகம் முதல் இரண்டு பாகங்களை விட மிகப்பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது .ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க,விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா ,மனோபாலா,சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் , இரண்டாவது பாடலான 'ரசவாச்சியே' இன்று வெளியாகி உள்ளது. தனது பின்னனி குரல் மூலம் ரசிகர்களை மயக்கும் குரலுக்கு சொந்தக்காரரான சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார். மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: