கொரோனா ஊரடங்கு காலத்தில் உங்கள் நேரத்தை எப்படிச் செலவிட்டு வருகிறீர்கள் என்ற கேள்விக்கு ஊடகம் ஒன்றுக்கு அளித்திருக்கும் பதிலில் “சுவையாக சமைக்கவும் சமையலறையை சுத்தம் செய்யவும் கற்றுக் கொண்டேன்.
சமயலறையையும் வீட்டையும் தூய்மையாக வைத்திருப்பது ஒரு கலை. அது அழகுணர்ச்சியுடன் தொடர்புடையது. இதுவொரு பக்கம் இருக்க, இந்தத் தலைமுறையினர் முன் எப்போதும் இல்லாத ஓர் உறுதியற்ற வாழ்க்கைச் சூழ்நிலையை கொரோனாவால் எதிர்கொண்டிருக்கிறார்கள். அதற்காக இளைஞர்கள், யுவதிகள் அஞ்சவில்லை.
வெளியே சுதந்திரமாக செல்ல முடியவில்லையே என்கிற மனநிலை அவர்களுக்குச் சவாலானது. ஆனால், இருக்கும் இடத்திலிருந்தே தங்களுடைய உழைப்பையும் திறமையையும் புதுமையான விதங்களில் எப்படிக் கொடுக்கலாம் என்று செயல்படுகிறார்கள். இந்த பேண்டமிக் இளைஞர்களுக்கு இப்படி வாழவும் திறமையை வெளிப்படுத்தவும் கற்றுக் கொடுத்திருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு பக்கம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஓவியங்களின் முன்னாள் அமர்ந்து ஸ்ருதி ஹாசன் எடுத்துக்கொண்டிருக்கும் படங்களைப் பதிவிட்டு.. “நான்கு சுவர்களுக்குள் நாங்கள் உருவாக்கிய சொர்க்கம். எங்கள் கனவுகள் வண்ணங்களில் கொட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார். இந்த ஓவியங்களை வரைந்தவர் ஸ்ருதி ஹாசனின் காதலர் என்று கூறப்படும் சாந்தனு ஹசாரிகா வரைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.