free website hit counter

ரஜினிக்கு பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் நன்றி !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜெண்டில்மேன் படத்தின் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தானொரு தீவிர ரஜினி ரசிகன் என்பதை எடுத்துக் கூறியதுடன், அவருக்கு நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்கள் மன்றம் கலைப்பு, அரசியலுக்கு முழுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு... அவரது ரசிகர்களில் ஒருவரான எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. உலகமெங்கும் வாழும் அவரது அனைத்து ரசிகர்களையும் மகிழச் செய்திருக்கும் என்பது நிச்சயம். சூப்பர் ஸ்டாரின் முடிவு, தெளிவான சிந்தனை, வருடத்திற்கு அவரது இரண்டு படங்களாவது தொடர்ந்து வெளிவந்தால்தான் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும், பல்லாயிரக் கணக்கான சினிமா தொழிலாளர்களும், ரசிகர்களும் மகிழ்வார்கள். சினிமா செழிக்கும், வியாபாரம் சிறக்கும். அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் சினிமா தொழில் சிதைந்து கிடக்கிறது. இந்த தருணத்தில் அவரது சரியான முடிவு திரையுலகினரின் மனங்களில் தேனை வார்க்கிறது.

ஒரு விநியோகஸ்தராக, ‘தங்கமகன்’, ’மூன்று முகம்’, படிக்காதவன்’, ’ஊர்க்காவலன்’, ’எஜமான்’, போன்ற அவரது நடிப்பில் வெளியான பல படங்ககளை நான் வெளியிட்டுள்ளேன். என்னைப் போலவே எத்தனையோ தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களால் லாபம் சம்பாதித்துள்ளனர். அவருடனான எனது பழக்கம் 40 வருடங்களுக்கும் மேலானது. சினிமாவில் அவர் ஒரு பணம் காய்க்கும் மரம். தயாரிப்பாளர்களின் தங்கப் புதையல், அனைவராலும் போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம். பூரண ஆரோக்கியத்தோடும் நல்ல உடல் நலத்தோடும், அவர் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன். சினிமாவின் சிகரமாய் உயர்ந்து நிற்கும் அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள்.!
வெல்டன் அண்ணாத்த.!

இப்படிக்கு கே.டி. குஞ்சுமோன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction