free website hit counter

ரஜினியிடம் சென்றுள்ள தனுஷ் பட பஞ்சாயத்து !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடிப்புக்காக 2 முறை தேசிய விருது வாங்கிவிட்டார் தனுஷ்! இந்த இரண்டு விருதுகளுமே வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்காக கிடைத்தவை. தன்னுடைய இயக்கத்தில் தனுஷுக்கு 3-வது விருதை வாங்கிக்கொடுத்தே தீருவேன் என்று கங்கனம் கட்டி களத்தில் இறங்கியிருக்கிறார் செல்வராகவன்.

தற்போது, தனுஷ் நடிக்க செல்வராகவன் இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துவரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வரும் ஆகஸ்ட் 20-ம் தொடங்கவிருக்கிறது. இந்தப் படத்துக்கு முதலில் ‘நானே வருவேன்’ என்று பெயர் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிட்டனர்.

ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்குள் படத்தில் எக்கச்சக்க மாற்றங்கள். தற்போது படத்தின் தலைப்பை ‘ராயன்’ என்று மாற்றியிருக்கிறார் செல்வராகவன். தயாரிப்பாளர் தாணு எதற்காக வைத்த தலைப்பை மாற்றுகிறீர்கள் என்று கேட்டதற்கு, ‘அதை உங்களிடம் சொன்னால், விஷயம் வெளியே போய்விடும். அதனால் உங்களுக்கும் சஸ்பென்சாக இருக்கட்டும். ஆனால், ஒன்றைச் சொல்கிறேன். ‘நானே வருவேன்’ கதையை நான் இப்போது எடுக்கப்போவதில்லை. தற்போது நான் வேறு கதையை எடுக்க முடிவு செய்துவிட்டேன். அதனால்தான் தலைப்பையும் மாற்றிவிட்டேன். இனி எந்த மாற்றமும் இருக்காது. இதுதான் கதை படித்துக்கொள்ளுங்கள்’ என்று கூறி தானுவுக்கு கதைச் சுருக்கத்தை கொடுத்துச் சென்றாராம் செல்வராகவன்.

இந்தப் பஞ்சாயத்தை தயாரிப்பாளர் தாணு, ரஜினியிடம் எடுத்துச் சென்றுள்ளார். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். செல்வராகவன் இன்னொரு குண்டையும் தூக்கிப் போட்டிருக்கிறாராம்! இந்தப் படத்தில் தனுஷுடன் நித்யாமேனன், ப்ரியா பவானி ஷங்கர், ஹன்சிகா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் நித்தியா மேனன் இப்போது தேவைப்படமாட்டார் என்று சொல்ல, நித்தியா மேனனுக்குக் கொடுத்த 15 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் அவ்வளவுதானா.. அல்லது அவருக்கு ஒரு துண்டு ரோல் கொடுப்பீர்களா என்று செல்வராகவனிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறாராம் தாணு!

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: