‘பா’, ‘சீனி கம்’, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’படங்களின் மூலம் பாலிவுட்டில் புகழ்பெற்ற தமிழ் நாட்டு இயக்குனர் பால்கி. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கதை ஒன்றைக் கூறியுள்ளாராம். அது ரஜினிக்குப் பிடித்துள்ளது. காரணமும் உண்டு.
பால்கி கூறும் கதையைக் கேட்கும்படி ரஜினிக்கு சிபாரிசு செய்தவர் பால்கி நண்பரான இளையராஜா. ரஜினி தற்போது அந்தக் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும் அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க அதிக வாய்ப்புள்ளது எனத் தெரியவருகிறது. கதையைக் கேட்டதும் ரஜினி, ராஜாவிடம் ‘இந்தப் படத்துக்கு நீங்கள் இசையமைத்தால் நான் நடிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். அதை ராஜாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியில் 89 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. முதலுக்கும் மோசமில்லை, தயாரிப்பாளருக்கு லாபம் என்கிற நிலையில், தற்போது ரஜினியை இயக்கினால் தனக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று கார்த்திக் சுப்புராஜ், ரஜினிக்கு 4 கதைகள் சொல்லி 4 கதைகளும் ரஜினிக்குப் பிடித்திருப்பதால் முதலில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பதா அல்லது பால்கி இயக்கத்தில் நடிப்பதாக என்கிற குழப்பத்தில் இருக்கிறாராம். பால்கியின் கதை ஒரு பான் இந்தியா திரைப்படத்துக்குரிய தன்மையுடன் இருப்பதால் அவரது இயக்கத்தில்தான் ரஜினி முதலில் நடிப்பார் என்கிறார்கள் இளையாராஜா வட்டாரத்தில். ரஜினி - இளையராஜா கூட்டணி உறுதியானால், வீரா (1994) படத்திற்கு பிறகு மீண்டும் இவர்கள் 27 வருடங்கள் கழித்து இணைவது முக்கிய அம்சமாக இருக்கும்.
-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை