free website hit counter

அபிஷேக் பச்சனை இயக்கும் பார்த்திபன்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புதுமையான விஷயங்களை தமிழ் சினிமாவில் முயன்றுவருபவர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன்.

இவர் தற்போது ‘இரவின் நிழல்’ என்ற படத்தை நடித்து, இயக்குகிறார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான இசையமைக்க இருக்கிறார். இதுவொரு பக்கம் இருக்க ‘ஒத்தச் செருப்பு’ படத்தை தற்போது இந்தியில் இயக்கி வருகிறார் பார்த்திபன். இதில் பார்த்திபன் ஏற்று நடித்த ஒற்றைக் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். கதை பிடித்துப்போனதால் படத்தை அபிஷேக் பச்சனே தயாரிக்கிறார். இவர், கான் நடிகர்களால் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தவர். மனைவி ஐஸ்வர்யா ராய் அதிகமாக சம்பாதிப்பதால் தன்னைப் பற்றிக் கவலைப் படாமல் இருந்து வருகிறார்.

அபிஷேக் பச்சன் தன்னுடைய இயக்கத்தில் நடிப்பதைப் பற்றி இன்று தன்னுடைய சமூக வலைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன் “ 6.3 உயரத்தில் ஒரு சிறுவன். இன்னும் உயரிய அப்பாவுக்குக் குழந்தை. உலகப் புகழுக்கு மகனாகவும், உலக அழகிக்கு கணவனாகவும், தானிருக்கும் அனுபவத்தை தானியங்கி இயந்திரமாய் தட்டிவிட்டாரென்றால் ரசிக்கலாம் - மணிகணக்கில்! முதலில் இப்படி ஒரு படத்தை தேர்வு செய்ததும், தானே தயாரிப்பதும், ரசனை!

பெருமையின்றி அலர்ட்டா இருப்பதும், அலட்டாமல் இருப்பதும் அடுத்த லெவலில் தன் நடிப்பு இருக்க மெனக்கெடுவதும் ரசிக்கிறேன் அவரிடம்> mr.ABISHEK BACHAN!!! பாதிப்படம் கடந்துவிட்டேன். எனக்கே முதல் ஹிந்தி ஆனால் என்னுடன் ராம்ஜி (cinematography)சத்யா (music) சுதர்சன் (editor) என்று தமிழ் அள்ளிப் போகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார். படப்பிடிப்பு தளத்திலிருந்து அபிஷேக் பச்சன் நடித்துள்ள ஒரு காட்சியின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction