இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிட்கெட் ஆட்டம் என்றாலும் சரி சொந்த வாழ்க்கை என்றாலும் சரி, ஸ்டைலுக்கு பேர் போனவர்.
அவரின் உடல்மொழி பாவனைகளும், சிகையலங்காரமும் அவரது ரசிகர்களை எப்போதுமே கவர்துள்ளன. அந்த வகையில் தோனி புத்த பிச்சுவின் தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி சமுக சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. அதன்பிறகு அந்த தோற்றத்தை ரசிகர்கள் மறந்துவிட்டனர்.
தற்போது அந்த தோற்றம் தோணியை ஒரு சூப்பர் ஹீரோ அவதாரமாகக் கொண்டு உருவாகும் கிராஃபில் நாவலில் இடம்பெறும் இருவித தோற்றங்களில் ஒன்று என்பது தெரியவந்துள்ளது. இது அனிமேஷன் திரைப்படமாகவும் உருவாகிறது. ‘அதர்வா - தி ஆரிஜின்’ என்று பெயரிடப்பட்டுள்ள அதனுடைய மோஷன் போஸ்டரை இன்று வெளியிடப்பட்டது. சூப்பர் ஹீரோவாகவும், போர்வீரர் தலைவராகவும், பின்னர் போரின் விளைவுகளை உணர்ந்து துறவி ஆக மாறுவதாகவும் இந்நாவலில் தோணியின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. தோனி அவரது சமூக வலைதள பக்கங்களில் இந்த முயற்சியின் மோசன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். மோஷன் போஸ்டரில் உள்ள தோனியின் முரட்டுத்தனமான தோற்றம், அவரது ரசிகர்களுக்கு அதர்வாவின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை அளிப்பதாக அமைந்துள்ளது, மேலும் முதல் முறையாக ஒரு கிரிக்கெட் வீரரை சூப்பர் ஹீரோவாக காட்டியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது.