free website hit counter

நடிகை கௌதமி பாதுகாப்புக் கோரி மனு !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடிகை கௌதமி தனக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  மனு கொடுத்துள்ளார்.

அவர் தனது புகாரில், தன்னுடன் பணியாற்றிய  அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரும், நீலாங்கரையிலுள்ள  9 கோடி மதிப்புள்ள தனது சொத்தை அபகரித்ததாக கௌதமி ஏற்கனவே புகார் கொடுத்த்திருந்தாகவும், அந்த புகாரின் அடிப்படையில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டதாகவும், இவை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளபோதே, சட்டவிரோதமாக மாநகராட்சியில் மின் இணைப்பு , கட்டிட அனுமதி பெற்று தனது நிலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றதாகவும், பின்னர் கோர்ட்ட உத்தரவின் பெயரில் அந்த கட்டுமானம் நடைபெறும் இடம்  சீல் வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வழக்கறிஞர் எனச் சொல்லி,  வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு, தனக்கு எதிராக நிலத்தில் உள்ள கட்டுமானத்தை இடிப்பது தொடர்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறி, மிரட்டுவதாக தற்போதைய புகாரில் தெரிவித்துள்ளார். தன்னை மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் கவுதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  இன்று மனு அளித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula