சிம்புவின் 50-வது படத்தை ராம் இயக்கவுள்ளதாவும் ‘மாநாடு’ புகழ் சுரேஷ் காமாட்சி அந்தப் படத்தைத் தயாரிக்கப் போவதாகவும் நேற்று பரபரப்பான தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடமும் சிம்புவிடமும் நேரடியாகவே 4தமிழ் மீடியாவுக்காக கேட்டோம். சிம்பு கொஞ்சம் உஷ்ணமாகவே பதில் சொன்னார். ‘அண்ணே.. ஃபேக் நியூஸ் மாக்கான்கள் தொல்லை தாங்க முடியல! நீங்க ஒருத்தர்தான் போன் பண்ணிக் கேட்டு உறுதிப்படுத்துறீங்க’ என்றார். சுரேஷ் காமாட்சியோ ‘ அண்ணே... நான்.. ராம்.. வெங்கட்பிரபு, சிம்பு இருக்கிற படத்தை என்னோட சமூகவலைதளப் பக்கத்துலப் போட்டேன். அதுக்கு இப்படி கதைகட்டி விட்டுட்டாங்க. செய்தி வறுமை அந்த அளவுக்கு இருக்குபோல’ என்று சிரித்தார்.
இவர் தயாரித்த ‘மாநாடு’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இதுதான் சிம்புவின் கம்பேக் என சினிமா விமர்சகர்கள் பலரும் குறிப்பிட்டிருந்தார்கள். இப்படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் தற்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துகொண்டிருக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படங்கள் தவிர்த்து ‘பத்து தல’ மற்றும் ‘கொரோனா குமார்’ உள்ளிட்ட படங்களில் சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார். பத்து தல 50% முடிந்துவிட்டது.
-4தமிழ் மீடியாவுக்காக மாதுமை