இது நேற்று சென்னையில் நடந்த சம்பவம் இது. சென்னையின் இதயமாக விளங்கும் அண்ணா சாலையில் 10 வயது சிறுவன் சசிவர்ஷன் என்பவர் தனது மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது பின்னால் உட்கார்ந்திருந்த சசிவர்ஷன் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துவிட்டார். இதனால் அவருக்கு தலை, கைகள், தோள்பட்டை, முட்டிக்கால் ஆகிய இடங்களில் தோல் கிழிந்து ரத்தம் கொட்டியது. பயந்துபோன சிறுவனின் மாமா, அருகில் இருந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேர்த்துள்ளார்.
சிறுவனைப் பார்த்த மருத்துவர்கள் 10-க்கும் அதிகமான இடங்களில் சசிவர்ஷனுக்கு போடவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். தையல் போடும்போது வலி தெரியாமல் இருக்கும் ஊசியைப் போட டாக்டர்கள் முடிவு செய்தனர். ஆனால் ஊசி என்றால் பயம் என்று சிறுவன் அழுது சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் டாக்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில் அங்கிருந்த தன்னார்வலர் ஒருவர் சிறுவனிடம் நைசாக பேச்சுக் கொடுத்தார்.
அப்போது சிறுவன் சசிவர்ஷன் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது தெரிய வந்ததை அடுத்து தன்னுடைய மொபைல் போனை எடுத்து அதிலிருந்த ‘பிகில்’ படத்தை போட்டு காண்பித்தார். அந்த சிறுவன் உடனே அழுகையை நிறுத்திவிட்டு ’பிகில்’ படத்தை சுவராசியமாக பார்த்துக்கொண்டிருந்தபோது டாக்டர்கள் வலி தெரியாமல் இருக்கும் ஊசியை சிறுவனுக்கு செலுத்தினார்கள். அதன் பின்னர், அவன் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவனது காயங்களை இணைத்து தையல்கள் போட்டனர்.
இதை சிகிச்சை அளித்த டாக்டரும் பிகில் படம் காட்டியவரும் பத்திரிகைகளுக்குச் சொல்ல, அதை நேற்று ஒருசில பத்திரிகைகள் மட்டுமே பிரசுரித்தன. மற்றவை பிரசுரிக்கவில்லை. அவை விஜய்மீது கடும் காண்டில் உள்ளன.