free website hit counter

முன்னாள் கணவருக்கு வாழ்த்து சொன்ன அமலாபால்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இயக்குனர் ஏ எல் விஜய் - நடிகை அமலாபால் இருவரும் தெய்வத்திருமகள், தலைவா படங்களிலும் பல விளம்பரங்களிலும் இணைந்து பணி புரிந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இந்நிலையில் பரஸ்பர நன்மை கருதி இருதரப்பு சம்மதத்துடன் விவாகரத்து பெற்றனர்.

பின்னர் கடந்த 2019-ல் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை ஏ எல் விஜய் திருமணம் செய்துகொண்டார். கடந்த ஆண்டு மே மாதத்தில் விஜய் - ஐஸ்வர்யா தம்பதிக்கு மகன் பிறந்தான். அவனுக்கு துருவா என்று பெயர் சூட்டினார்கள். இவனுடைய முதலாவது பிறந்த தினத்தை குடும்ப உறுப்பினர்கள் சூழ சமீபத்தில் கொண்டாடியுள்ளனர்.

அந்த குடும்ப நிகழ்ச்சி பற்றிய படங்களை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டனர். அதைப் பார்த்து அமலா பால் மனம் நெகிழ்ந்து விஜய் - ஐஸ்வர்யா தம்பதிக்கும் குழந்தை துருவாவுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தொலைபேசி வழியாக தெரிவித்துள்ளார். விவாகரத்து பெற்றுவிட்டாலும் ஏ எல் விஜயுடன் தன்னுடைய நட்பை ஆரோக்கியமாக பேணி வருகிறார் அமலா பால். பொதுவெளியில் அதுகுறித்து அவர் பேசுவதில்லை.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: