free website hit counter

குறி வைக்கும் 'AK'

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தனது அடுத்த கார் பந்தயத்துக்கு அஜித்குமார் தயாராகிவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில், இந்தியாவின் சார்பில் ‘அஜித் குமார் ரேசிங் குழு’ கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தது . இதனை அடுத்து, இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியிலும் அஜித் குமார் ரேசிங் அணி கலந்து கொண்ட நிலையில், அதிலும் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது.

இந்த நிலையில், அடுத்ததாக Gt4 European Series-க்கு தயாராகிறார். இதற்காக அவர் காரை தயார் செய்யும் காட்சிகளை வீடியோவாக இணையத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் மூன்றாவது இடம் பிடித்த அஜித்தின் கார் ரேஸ் அணி, இந்த போட்டியில் முதலிடம் கிடைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

நடிப்பு, கார் ரேஸ் மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதலிலும் அஜித்குமார் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula