இசையமைப்பாளராகவும், பின்னணிப் பாடகராகவும், சிறந்த நடிகராகவும் மக்கள்
மத்தியில் அறியப்பட்டவர், பல விருதுகளுக்கு சொந்தக்காரர் மாணிக்க விநாயகம். நல குறைவு காரணமாக அவர் தன்னுடைய 73 வயதில் இன்று காலமானார்.
மாணிக்க விநாயகம், உலகம் போற்றிய நடன ஆசிரியர், வழுவூர் ராமையா பிள்ளையின் இளைய மகனிவர்.
நேர்காணல் ஒன்றின்போது தன்னைக் குறித்து பகிர்ந்த தகவல்களை ஒரு தமிழ் மீடியா இங்கே மீள்பிரசுரம் செய்கிறது.
"எனக்கு ஏழு வயசிருக்கும் போதே என்னோட மாமாவும், குருவுமான இசை மேதை சிதம்பரப்பிள்ளையிடம் சங்கீதம் கத்துக்கிட்டேடேன். இது தவிர குடும்பக்கலையுமான நாட்டியத்தையும் கற்றுக் கொண்டேன். பின்னர் இசையின் மீது கொண்ட ஈர்ப்பால் 1980களில் ஒரு வானொலியில் இசையமைப்பாளராக செல்க்ட செய்யப்பட்டு சென்னையிலுள்ள தொலைக்காட்சிகள், வானொலிகளில் பல நூறு பாடல்களுக்கு இசையமைச்ச்ர் வந்தேன். அதன் பின்னர் சில காலங்களில் பல ஒலி நாடாக்களுக்கு பக்திப் பாடல்கள், காதல் பாடல்கள், தேவாரங்கள், திருப்புராணங்கள் போன்றவற்றுக்கு இசையமைத்து உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மனதில் இடம்பிடிச்சேன். அது மட்டுமல்ல, எனது இசையில் பழைய பாடகர்களில் இருந்து தற்போது உள்ள பாடகர்கள் வரை பல பாடகர்கள் பாடியிருக்காங்க. இதுவரையில் 15,000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து பாடியிருக்கிறேன். இதற்காக தமிழக அரசு 2003 ஆம் ஆண்டு ‘கலைமாமணி’ விருது கொடுத்தது. 2008 இல் கலைஞர் கருணாநிதி ‘இசைமேதை’ என்ற பட்டம் கொடுத்தார்.
அப்பதான் என்னோட பாடல்களை வித்தியாசாகர் கேட்டுவிட்டு ‘தில்’ படத்தில் முதன் முதலாக நடிகர் விக்ரமுக்காக பாடும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த படத்தில் “கண்ணுக்குள்ள கெளுத்திசு என்ற பாடல் எனக்கு பெரும் புகழையும் வெற்றியையும் தேடித்தந்துச்சு. அதுக்கு அப்புறமாக வித்தியாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், யுவன் சங்கர் ராஜா இப்படிப்பட்ட எல்லா இசையமைப்பாளர்களிடமும் வெற்றிப் பாடல்களைப் பாட சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பாடியிருக்கிறேன்." என்று அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அன்னாருக்கு அஞ்சலி. நாளை தமிழக முதல்வர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இருக்கிறார். மாணிக்க விநாயகத்தின் வீடு சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ளது.