free website hit counter

விஜயின் 67-வது படத்தில் கதாநாயகிக்கு கல்தா !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாநகரம் படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுமானர். அவர் இயக்கிய இரண்டாவது படம் கைதி. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் பாடல்கள் மற்றும் ஹீரோயின் இன்றி உருவாக்கப்பட்டு இருந்தது.

தளபதி விஜய்யின் பிகில் படத்துக்கு போட்டியாக வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று அதிர வைத்தது. இப்படம் தற்போது இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்டு வருகிறது.

லோகேஷ் கனராஜின் ஸ்டைல் ஆஃப் மேக்கிங் மூலம் ஈர்க்கப்பட்ட விஜய், தனது படத்தினை இயக்க வாய்ப்பு வழங்கினார். மாஸ்டர் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதன்மூலம் கோலிவுட்டின் முக்கிய இயக்குனராக உயர்ந்தார் லோகேஷ். வரிசையாக ஹாட்ரிக் ஹிட் கொடுத்த லோகேஷ் அடுத்ததாக உலக நாயகன் கமலின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், ‘அஞ்சாதே’ நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும், விஜய்யின் 67-வது படத்தை அவர் இயக்குவது உறுதியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக விஜய் வட்டாரத்திலிருந்து கசியவிடப்பட்டுள்ள தகவல்களின்படி இப்படம் ஹீரோயின் இல்லாமல், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி பட பாணியில் உருவாக இருப்பதாக தெரியவருகிறது. விரைவில் இத்திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: