free website hit counter

ஒரு புகைப்படத்திற்கு 3.5 மில்லியன் லைக்குகள்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பெங்களூரு பெண்ணா ராஷ்மிகா மந்தனா கிரீக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பிறகு அவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் குவிந்தன. விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். தமிழில் கார்த்தி ஜோடியாக‘சுல்தான்’ மூலம் அறிமுகமானார். மலையாளம் தவிர மற்ற அனைத்து மொழிப் படங்களிலும் பிஸியாக நடித்துவரும்‘மிஷன் மஞ்சு’ இந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அடி வைத்துள்ளார். ஷாந்தனு பாஹி இயக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய சமூக வளைதளப் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறார் ராஷ்மிகா. நெருக்கக் கட்டிய மல்லிகை பூக்களின் சரத்தை ஒரு கிரீடம் போல் தலையில் வைத்துக்கொண்டு அழகாக சிரித்து படமெடுத்து அதைப் பதிந்துள்ளார் ராஷ்மிகா. இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் தேவதை தனக்கு தானே மலர் கிரீடம் சூட்டிக் கொண்டுள்ளதாக எதிர்வினைகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த ஆண்டில் ராஷ்மிகா பதிவிட்டவற்றில் இதுவே தங்களை அதிகம் வசிகரித்தது என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார். இந்தப் புகைப்படத்துக்கு பதிவிட்ட 24 மணிநேரத்தில் அவருக்கு 3.6 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: