நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்துப் பெற்றுத் தனித்தனியாக வாழ்ந்துவரும் நிலையில், மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில், பெற்றோர்களாக இணைந்து கலந்து கொண்டார்கள்.
இதன் புகைப்படத்தினை தனது சமூக வலைத்தளத்தில், பெருமைக்குரிய பெற்றோர்கள் எனத் தனுஷ் பகிர்ந்து கொண்டார். கடந்த சிலமாதங்களின் முன் யாத்ராவின் போட்டியிலும் பெற்றோர்களாக இணைந்து கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பின்னதாக இம் மாதம் 20 ந் திகதி வெளியாகும், நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் இருவரும் இணைந்து கலந்து கொண்டுள்ளமை பலரதும் கவனம் பெற்றுள்ளது. இவர்கள் இருவரும் மீண்டும் இணையலாம் எனவும் ஊகங்களும் எழுந்துள்ளன.
ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தில், கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகின்றது. 'குபேரா' திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும்
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    