நல்லவன், கெட்டவன் என அஜித் இருவித வேடங்களில் நடித்திருந்த படம்‘வாலி’.
இந்தப் படத்தின் மறு ஆக்க விவகாரத்தில் எஸ் ஜே சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது உச்ச நீதி மன்றம். ‘வாலி’ படத்தின் ரீமேக் உரிமையை போனி கபூர் பெற்றிருந்த நிலையில், ரீமேக் செய்யும் உரிமை தனக்கு மட்டுமே உள்ளது என கூறி எஸ் ஜே சூர்யா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
எஸ்.ஜே. சூர்யா எழுதி இயக்கி, இயக்குனராக அறிமுகமான முதல் படம் ‘வாலி’. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய போனி கபூர் இதன் உரிமையை வாங்கியிருந்தார். 1999-ம் ஆண்டு வெளியான வாலி படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரனும் ஜோதிகாவும் நடித்திருந்தார். இரட்டையர்களில் தம்பி அஜித்தின் மனைவியான சிம்ரனை அடைய அண்ணன் அஜித் மேற்கொள்ளும் முயற்சிகள் தான் படம். இந்தப் படத்தின் கதை, எஸ்.ஜே.சூர்யாவுக்கு கெட்டப் பெயரைப் பெற்றுக்கொடுத்தாலும் பலரும் திட்டிக்கொண்டே அந்தப் படத்தைப் பார்த்தனர். படமும் 100 நாட்கள் ஓடி வெற்றிபெற்றது.
இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியிடமிருந்து பெற்றிருந்தார் அஜித் பட தயாரிப்பாளரான அஜித். ஆனால், ‘ரீமேக் உரிமையை விற்க தயாரிப்பாளர் மட்டும் முடிவெடுத்தால் போதாது அந்தப் படத்தின் கதாசிரியர் மற்றும் இயக்குனருக்கும் உரிமை உள்ளது’ என்று எஸ்.ஜே. சூர்யா வழக்கு தொடர்ந்தார்.
பல கட்ட விசாரணக்கு பின்னர் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார் எஸ்.ஜே. சூர்யா இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ‘படத்தின் அனைத்து உரிமைகளையும் எஸ்.ஜே.சூர்யா தயாரிப்பாளருக்கு தாரை வார்த்துவிட்டார். அது ஒப்பந்தத்தில் தெளிவாக உள்ளது. அவர் எதிர்ப்பு தெரிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை’ எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. போனி கபூர் காட்டில் மேலும் பண மழைதான்!