free website hit counter

முத்துநகர் படுகொலை - தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் ஆவணம் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் நடந்த போராட்டத்தை 'மெரினா புரட்சி' என்ற ஆவணத்திரைப்படமாக உருவாக்கியிருந்தார்.

எம்.எஸ்.ராஜ். கடும் போராட்டத்திற்குப் பிறகு தணிக்கை பெற்ற 'மெரினா புரட்சி' நார்வே, கொரிய திரைப்பட விழாக்களில் விருது பெற்றது.

தற்போது கடந்த 2018 மே மாதம் 22 , 23 தேதிகளில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை PEARLCITY MASSACRE (முத்துநகர் படுகொலை) என்ற பெயரில் புலனாய்வு ஆவணப்படமாக தயாரித்து இயக்கியிருக்கிறார்.


இந்த ஆவணப் படத்தை பற்றி இயக்குனர் எம்.எஸ்.ராஜ் கூறும்போது: “PEARLCITY MASSACRE(முத்துநகர் படுகொலை) புலனாய்வு ஆவணத்திரைப்படம் உண்மையில், 2018 மே 22 , 23 தேதியில் நடந்த கொடூர சம்பவங்களை சாட்சியங்களுடன் பதிவு செய்திருக்கிறது. மேலும் அரச இயந்திரம் செய்த தவறுகளை ஆதாரங்களுடன் படமாக்கியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த ஆவணப்படத்தை திரையிட்டோம். வழியும் கண்ணீரை துடைத்தபடியே படத்தை பாராட்டியவர்கள் விரைவில் நீதி வழங்க வேண்டும் என்று கோரி கையெழுத்திட்டனர். தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் (32 நாடுகளில்) இந்த படத்தை திரையிட்டு பார்வையாளர்களின் கையெழுத்துக்களை திரட்டி தமிழக அரசிடம் வழங்க இருக்கிறோம்." என கேட்டுக்கொண்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula