free website hit counter

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் புயல்வேகம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் சினிமாவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தங்கள் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’, ‘ராக்கி’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, 'கனெக்ட்’,‘

வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’,‘ஊர்குருவி’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளனர். இவற்றில் கூழாங்கல் மட்டும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில், மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரித்திகா சிங் முக்கிய வேடங்களில் நடித்த, தமிழ் திரைப்படமான ’ஆண்டவன் கட்டளை’யின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ‘சுப் யாத்ரா’ மூலம் குஜராத்தி சினிமாவில் இறங்கியுள்ளனர். இதன்மூலம் படத் தயாரிப்பில் புயல்வேகம் காட்டி வருகிறார்கள்!

இந்த ரீமேக் திரைப்படத்தில் குஜராத்தி சூப்பர் ஸ்டார் மல்ஹர் தாக்கர், மோனல் கஜ்ஜர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தை குஜராத்தி திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் மனிஷ் சைனி இயக்குகிறார். தற்போது, ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் ஏப்ரல் 28, 2022 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவொருபுறம் இருக்க நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர் ஆகியோர் நடிப்பில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் பரபர திகில் படமான 'கனெக்ட்’, மற்றும் சூரரைப் போற்று புகழ் கிருஷ்ண குமார், பின்னணிப் பாடகி ஜோனிதா காந்தி, பிரபல கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் சகோதரி மால்தி சாஹர் ஆகியோர் நடிக்க, அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கும் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்ற ரோம்-காம் திரைப்படமும் தயாரிப்பில் உள்ளது. மேலும் அறிமுக இயக்குனர் அருண் இயக்கத்தில் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஊர்குருவி’ படமும் பரபரப்பாக உருவாகி வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction