free website hit counter

இடதுகை பழக்கம் உள்ளவராக மாறினார் பிரபுதேவா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தேள்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரைபிரபலங்கள் முன்னிலையில், சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். பிரபல நடன இயக்குனரான
ஏ.ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, ஈஸ்வரி ராவ் இருவரும் அம்மா, மகனாக நடித்துள்ளனர்.சி.சத்யா. இசையமைத்துள்ளார்.

இவ்விழாவில் பிரபுதேவா பேசும்போது:

இயக்குநர் ஹரிகுமார் நல்ல உழைப்பை இப்படத்துக்கு தந்துள்ளார். ரசிகர்கள் இது செட்டா இல்லை ஒரிஜினல் லொகேஷனா என சந்தேகப்படும் அளவு அற்புதமாக கலை இயக்கம் செய்துள்ளார்கள். முழு டப்பிங்கையும் அரை நாளில் முடித்துவிட்டேன். இசையமைப்பாளர் சத்யா எனது பள்ளி கெமிஸ்ட்ரி ஆசிரியரை ஞாபகப்படுத்தினார். அவர் இப்படத்திற்கு மிக சிறப்பான இசையை தந்துள்ளார். அவரும் நானும் பல படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறோம். ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன். நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குநர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார். ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளுல் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும் என்றார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction