free website hit counter

Sidebar

06
செ, மே
61 New Articles

விஜய்யுடன் கைகோர்க்க போட்டிபோடும் நான்கு பெண்கள் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார் விஜய். ஒரு படத்தில் நடித்துகொண்டிருக்கும்போதே.. தனது அடுத்த படத்தை முடிவு செய்துவிடுவார் விஜய்.

அப்படித்தான் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை தெலுங்கு இயக்குநரான வம்சிக்கு வழங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு யாரை ஜோடியாக நடிக்க வைப்பது என்பது பற்றி, தமிழ் மற்றும் தெலுங்கில் செல்வாக்குள்ள 4 கதாநாயகிகளை பரிசீலனை செய்து வருகிறார்கள். அவர்களில் சமந்தா, மாளவிகா மோகனன், தமன்னா, ராஷ்மிகா மந்தனா ஆகிய நான்கு பேர் இடம்பெற்றுள்ளனராம்.

இதற்கிடையில் பாலிவுட்டிலிருந்து புதிய நடிகையை தமிழுக்கு அறிமுகப்படுத்தினால் என்ன என்று விஜய் கேட்டுள்ளார். இதை அறிந்த சமந்தா, ‘தற்போது நான் அட்லி இயக்கத்தில் ஷாரூக் கான் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளேன். அதேபோல் டாப்சி பண்ணு தயாரிப்பில் உருவாகும் புதிய இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். தமிழ், தெலுங்குக்கு மட்டும்மல்ல, விஜய் சாரின் இந்தப் படம் ரிலீஸ் ஆகும் 2023-ல் நான் பாலிவுட்டில் பிரபலமாகியிருப்பேன்’ என்று கூறியுள்ளார். இதுபற்றி விஜய் யோசித்து வருவதாக அவரது தரப்பில் கூறுகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula