free website hit counter

மெண்டல் பய! என இளையராஜாவிடம் திட்டு வாங்கிய இயக்குனர்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விரைவில் சூர்யாவை மீண்டும் இயக்க இருக்கிறார் இயக்குனர் பாலா இந்த சமயத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்

இளையராஜாவுக்கும் தனக்குமான தொழில்முறை உறவு குறித்து நினைவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்:

'நான் கடவுள்' க்ளைமாக்ஸ் பார்த்துட்டு, அதிர்ச்சியாகிட்டார் ராஜா சார்.

'மென்டல் பய... இப்படி அறமே இல்லாம எடுத்திருக்கானே... இவனை என்ன பண்றது?’னு திட்டினார். ஏன்னா, ரெண்டு பேரோட தத்துவப் புரிதலும் நேர் எதிர்.

ரமண மகரிஷியைப் பற்றி அவர் போட்ட 'ரமணமாலை’ பாடலை, 'சார் இந்தப் பாட்டை நான் பயன்படுத்திக்கிறேன்’னு வாங்கினேன். ஏதோ சாமி பாட்டு எடுக்கப்போறேன்னு நினைச்சிருப்பார். ஆனா, அதைப் பிச்சைக்காரங்களை வெச்சு 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்...’னு பயன்படுத்தினேன். பார்த்ததும் பதறி, 'டேய் அது 'ரமணமாலை’டா. அதை இப்படிப் பண்ணிட்டியேடா’ன்னார்.
அப்புறம், 'ஒரு சாமி பாட்டு வேணும் சார்... சிவனைப் பத்தி’னு சொன்னதும், 'ஓம் சிவோஹம்’னு பக்தி மல்கப்
போட்டுக்கொடுத்தார். அந்தப் பாட்டுக்குள்ள டூமச் வயலென்ஸ் இறக்கிட்டேன். 'எதைப் போட்டுக் கொடுத்தாலும் வேறமாதிரி எடுத்துட்டு வந்துடுறானே... பைத்தியக்காரன்’னு கோபமா சொல்வார். ஆனா, அவ்வளவு அன்பா பார்த்துப்பார்!

உங்களுக்கு எல்லாம் தெரியாத ஒரு ரகசியம்... அவர் எந்த அளவுக்குச் சிறந்த இசையமைப்பாளரோ, அதே அளவு சிறந்த எடிட்டர். படம் ஓடணும்கிறதுக்காக
கமர்ஷியல் கூட்டணும்கிறதுல ரொம்ப கவனமா இருப்பார். உதாரணமா 'நான் கடவுள்’ படத்துல பிளாக் அண்ட் ஒயிட்லதான் டைட்டில் போட்டிருந்தேன்.

'இதுக்கு எல்லாம் மியூசிக் பண்ணமுடியாது. காசியில எடுத்த ஃபுல் ஃபுட்டேஜையும் வெச்சு ஒரு பாட்டு நீளத்துக்குப் போட்டுக்கொடு’ன்னார். 'அப்படி எதுவும் இல்லே’னு புளுகினேன். 'பொய் சொல்ற... அதெல்லாம் இருக்கும். போய் எடுத்துட்டு வா’னு சொல்லி, அந்த மான்டேஜ் வெச்சு அவர் பண்ணதுதான் அந்த 'மா கங்கா...’ டைட்டில் சாங். படத்துக்கான ஃபீலை டைட்டில்லயே செட் பண்ணிட்டார். காசியில் 'கங்கா ஆர்த்தி’ நிகழ்ச்சி பிரபலம். இப்ப காசியில அந்தப்
பாட்டுடனும்தான் கங்கா ஆர்த்தி நடக்குது’’ என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் பாலா.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction