free website hit counter

கமலுடன் இணைகிறார் கீர்த்தி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் காவல் அதிகாரியாகவும் டேனியல் பாலாஜி வில்லனாகவும் நடித்து 2006-இல் வெளியான படம் 'வேட்டையாடு விளையாடு'.

கிரைம் த்ரில்லர் படமான இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்துக்க்கான திரைக்கதையை எழுதினார் கௌதம் மேனன்.

இரண்டாம் பாகத்தையும் கெளதம் மேனன் இயக்க, அதில் கமலுடன் அனுஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்தனர். அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க முடிவானது. ஆனால், இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட விபத்தால், இந்தப் படம் தற்காலிகமாக கைவிடப்பட்டதுடன், கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா ஆகிய இருவரும் கமலுடன் நடிப்பதும் இயலாதுபோனது. இந்நிலையில் விக்ரம் படத்தை தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஏற்கெனவே காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் ஆகிய நடிகைகள் இடம்பெற்றுள்ள நிலையில் கீர்த்தி சுரேஷும் இடம்பெறுவார் எனத் தெரியவந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் திரைக்கதையில் மாற்றம் செய்துள்ளதால், கீர்த்தி சுரேஷ், நடிகை கீர்த்தி சுரேஷாகவே நடிக்க சில காட்சிகளை கதையில் சேர்த்துள்ளாராம். அதாவது நடிகையைக் கடத்தும் காட்சி இடம்பெறுகிறது எனத் தெரியவந்துள்ளது. ஆனால், கீர்த்தி சுரேஷ் தரப்பு இதுபற்றி இன்னும் பதில் தரவில்லை என்றும் தெரிகிறது. அதே சமயம், கமலுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை கீர்த்தி சுரேஷ் ஏற்கவே கமலிடம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: