free website hit counter

சிம்பு படப்பிடிப்பு ரத்து!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிம்பு - கௌதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் ‘பத்து தல‘ படத்தில் பிரபல தமிழ் கவிஞர் மனுஷ்யபுத்திரன் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது. ஆனால், தொடர் கன மழை காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் சில முக்கிய காட்சிகளில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார். இதில் ஆக்ஷன் காட்சிகளும் காதல் காட்சிகளும் அடக்கம். இதில் ப்ரியா பவானி சங்கருக்கு வீரத்துடன் போராடும் தாசில்தார் வேடம். இதற்காக அவர் நிறைய ஹோம் ஒர்க் செய்துள்ளதாக கூறியிருக்கிறார்

கன்னியாகுமரி படப்பிடிப்பு ரத்துசெய்யப்பட்டதும் அங்கிருந்து அவர் கிளம்பும்போது ஏற்பட்ட உணர்வை தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தன்னுடைய பதிவில்: “ மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் பத்து தலை படத்தின் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் ரம்யமான இந்தப் பகுதியும் இங்குள்ள மக்கள், தட்பவெப்பம், இங்கு பிரபலமாக உள்ள உணவுகளும் என் மனதுக்கு நெருக்கமாகி விட்டன.” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். சில போட்டோக்களை இந்த பதிவுடன் பகிர்ந்துள்ளார். விரைவில் மீண்டும் கன்னியாகுமரிக்கு செல்ல உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction