free website hit counter

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மரணம் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கன்னடப்பட உலகின் தற்கால சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,பின்னர் கதாநாயகனாக உயர்ந்து, பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் புனித் ராஜ்குமார். அவரை கன்னட மக்கள் அப்பு என்ற செல்லப்பெயரால் அழைத்தனர்.

இன்று 29.10. வெள்ளியன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது புனித் ராஜ்குமாருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவரது உதவியாளர்கள் அவரை பெங்களூரின் பிரபல மருத்துவமனையான விக்ரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பார்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன்னர் அவர் உயிர் பிரிந்தது.

அவரது மறைவைக் கேட்டு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனை முன் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து கன்னடத்திரையுலகின் அத்தனை நட்சத்திரங்களும் மருத்துவமனை நோக்கி குவிந்து வருகின்றனர்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction