free website hit counter

வெள்ளிப் பனிமலை நோக்கி சமந்தா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாக சைதன்யாவுடனா மண வாழ்க்கையிலிருந்து பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்தார் சமந்தா.

தென்னிந்திய சினிமாவின் முன்னணிக் கதாநாயகியாக இருக்கும் சமந்தா பற்றி ஏராளமான வதந்திகள் உலா வருகின்றன. குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை, கருக்கலைப்பு செய்தார், இன்னொருவருடன் காதலில் இருந்தார் என்றெல்லாம் தெலுங்கு திரையுலகில் வாய் கூசாமல் பேசி வருகிறார்கள். இதனால் சமந்தா கடும் மன அழுத்தத்தால் பதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார். தன் மீது விமர்சனங்களை எழுப்பிய மன அழுத்தம் ஏற்படக் காரணமாக அமைந்த, தெலுங்கு சமூகவலைக் காணொளி சேனல் மீது அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளார் சமந்தா.

ஆனால், மன அழுத்திலிருந்து முழுமையாக மீள சுற்றுலா சென்று வருமாறு அவரது நலவிரும்பிகள் அறிவுறுத்தியுள்ளானர். இதையடுத்து மன அழுத்தத்தை போக்க, தனது தோழியுடன் இணைந்து தனி ஹெலிஹாப்டர் விமானத்தில் ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அந்தப் படங்களை அவர் தனது சமூகவலைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றில் யமுனை நதி பாலத்தின் மீது அவர் எடுத்துகொண்டுள்ள படமும், மகரிஷி மகேஷ் யோகி ஆஸ்ரமத்தின் முன் உள்ள படமும் அடங்கும். அந்தப் படங்களைத்தான் இங்கே பார்க்கிறீர்கள். சுற்றுலாவிலிருந்து திரும்பிய பின் அவர் முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்த உள்ளாராம்.

தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் மேலும் இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவிருக்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction