free website hit counter

ஜீவனாம்சம் மறுத்த சமந்தா! நடந்தது என்ன?

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ், தெலுங்குப் படவுலகில் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  நாக சைதன்யா - சமந்தா நட்சத்திர தம்பதியின் பிரிவு.

இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இரு படவுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் இருவருக்கிடையில் சமரசம் செய்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் அவை அனைத்துமே தோல்வியில் முடிந்துவிட்டன. இந்நிலையில் “சமந்தாவுக்கும், சைதன்யாவுக்கு இடையே நடந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நான் இதை மிகுந்த பாரமான மனத்துடன் தெரிவிக்கிறேன். ஒரு கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் விஷயங்கள் முற்றிலும் தனிப்பட்டவை.    சமந்தாவும், சைதன்யாவும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். சமந்தா இந்த வீட்டில் இருந்த நாட்களை, அவர் எங்களுடன் செலவழித்த நேரங்களை நாங்கள் எப்போதும் அன்புடன் நினைவுகூர்வோம். சமந்தா எப்போதும் எங்களுக்கு நெருக்கமானவராக தான் இருப்பார். இருவருக்கும் இறைவன் மன வலிமையைத் தரட்டும்” என்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  

இதற்கிடையில் இருவருடைய பிரிவுக்கான காரணங்கள் பற்றி பல்வேறு ஊகங்கல் வெளியாகி வருகின்றன.  இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தா தனது சமூகவலைப் பதிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்: “எனக்கு எதிராக பரப்பப்பட்ட வதந்திகளுக்கும், கதைகளுக்கும் எதிராக என்னைப் பாதுகாத்த அனைவருக்கும் நன்றி.  எனக்கு மற்றொருவருடன் தொடர்பு இருந்தது, நான் குழந்தை பெற எண்ணவில்லை, நான் கருவைக் கலைத்தேன், நான் ஒரு சந்தர்ப்பவாதி என்றெல்லாம் கூறினார்கள்.  விவாகரத்து வலி மிகுந்தது. தனியாக அதிலிருந்து நான் மீண்டு வர சிறிது நேரம் கொடுங்கள். என் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதல் இடைவிடாது தொடரும். நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன் அவர்கள் கூறும் எதுவும் என்னை உடைத்துவிடாது” என்று தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

அதேபோல், சமந்தா ஜீவனாம்சத்தை மறுத்துள்ளதற்கும் அவருடைய ரசிகர்கள், அபிமானிகள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது. காரணம், நாக சைதன்யா குடும்பத்தினர் கொடுக்க முன்வந்த ஜீவனாம்ச தொகை ரூபாய் 200 கோடி என்றும் அதை  சமந்தா ஏற்க மறுத்துவிட்டார் என்றும் ஆதாரமற்றத் தகவல்கள் வெளியாகின.  இது தொடர்பாக சமந்தா தரப்பில் விசாரித்தபோது, ‘நாக சைதன்யா குடும்பத்தினர் ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்தது உண்மைதான். ஆனால், அது 200 கோடி ரூபாய் அல்ல. தான் சுயமரியாதையுடன் வாழ விரும்புவதாகவும் கூறி, சமந்தா அவர்களுடைய ஜீவனாம்சத்தை வாங்க மறுத்துவிட்டார்.  மேலும், நாக சைதன்யா - சமந்தா இருவரும் வாழ்ந்து வந்த ஹைதராபாத் வீட்டை சமந்தா சொந்தமாக வாங்கிவிட்டார். தற்போது அதில்தான் வசித்து வருகிறார். இனிமேல் முழுக்க சினிமாவில்தான் கவனம் செலுத்துவார்’ என்று தெரிவித்தார்கள். என்றாலும் சமந்தா ஜீவனாம்சத்தை மறுத்துள்ளது அவர் மீதான மரியாதையைக் கூட்டியுள்ளது. அதேநேரம் அக்னினேனி எனும் நாகேஷ்வர ராவ் குடும்பமும் பெயரைக் கெடுத்துக்கொள்ளாத குடும்பம் என்பதால் இந்த பிரிவுக்கு அனைவரும் வருத்தம் மட்டுமே தெரிவித்து வருகிறார்கள்.

4தமிழ் மீடியாவுக்காக மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula