free website hit counter

நடிகர் சங்கத் தேர்தல்: பிரகாஷ் ராஜுடன் மோதும் சீனியர் நடிகரின் மகன்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்சினிமா நடிக்கும் நடிகர்களின் பாதுகாப்புக்காக ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ உள்ளது. அதுபோல், மலையாள நடிகர்களுக்கு ‘அம்மா’ என்ற சங்கம் இருக்கிறது.

தற்போது ‘மா’ நடிகர்கள் சங்கத்துக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அதற்கான தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதில் அந்தந்த அணியினர் செய்யப் போகும் உதவிகளைச் சொல்லி ஓட்டுக் கேட்பதையும் தாண்டி தனி மனிதத் தாக்குதல்களும் தொடங்கிவிட்டன.

 ‘மா’ சங்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜும், சீனியர் நடிகரான மோகன் பாபுவின் மகன்களில் ஒருவரான விஷ்ணுவும் ஒருவர் மாற்றி ஒருவர் மிகக் கடுமையான வார்த்தைகளால் தாக்கிக்கொண்டு வருகின்றனர். தபால் ஓட்டு போடும் மூத்த உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதாக விஷ்ணு மற்றும் அவரது தந்தையான மோகன்பாபு மீது புகார் சொன்னார் நடிகர் பிரகாஷ்ராஜ். இதை மறுத்த விஷ்ணு “பிரகாஷ்ராஜ் நல்லவரில்லை. என் குடும்பத்தைத் தேவையில்லாமல் இழுத்தால் அவருக்கு மரியாதை இருக்காது” என்று காட்டமாக பதில் கூறியுள்ளார்.

இது பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ள விஷ்ணு, “பிரகாஷ்ராஜ் சொல்வது அனைத்தும் பொய். நாங்கள் யாரிடமும் வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை. தேர்தலில் நிற்பதால் அனைவரிடமும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறோம். அதன்படி வாக்கு கேட்கும் போது வயதானவர்களிடத்தில் வாக்குகளை எப்படி செலுத்துவது.. தபால் வாக்குகளை எப்படி அனுப்பி வைப்பது என்பதை நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம். இதில் தப்பில்லையே..? பிரகாஷ் ராஜ் நல்ல நடிகர் மட்டுமே. ஆனால் நல்ல மனிதரல்ல. திரைக்கு வெளியில் அவருக்கு எங்கேயுமே நல்ல பெயர் இல்லை. ஒவ்வொரு மாநில சினிமா துறையிலும் அவர் ஏதாவது ஒரு பிரச்சினையை இழுத்து வைத்திருக்கிறார். நீங்கள் எந்தவொரு இயக்குநரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்.. பிரகாஷ் ராஜ் பற்றி வண்டி வண்டியாக சொல்வார்கள்” என்று கூறியிருக்கிறார். ஆனால், பிரகாஷ் ராஜ் இதுபற்றி பதில் கூறாமல் மௌனம் காத்து வருகிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction