பாலிவுட் சினிமாவின் கான் நடிகர்களில் முன்னணி சூப்பர் ஸ்டார்களாக இருப்பவர்கள் சல்மான் கான் மற்றும் ஷாரூக் கான் ஆவர்.
இவர் இருவருமே வியாபாரப் போட்டிகளைத் தாண்டி நண்பர்களாக உள்ளனர். அவர்களுடைய நல்லது கெட்டதுகளில் இருவருமே பங்கெடுத்துள்ளனர். சல்மான் கான் - ஐஸ்வர்யா ராய் காதல் விவகராத்தில் ‘பாலிவுட் பாட்ஷா’ என்று அழைக்கப்படும் ஷாரூக் கான் செய்து வைத்த சமாதானம் இத்தருணத்தில் நினைவுகூறத்தக்கது.
ஆனால், தற்போதைய விஷயம் அதுவல்ல; போதைபொருள் கையாண்டது. கையில் வைத்திருந்தது ஆகிய பிரிவுகளில் ஷாரூக் கான் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டை உலுக்கியிருக்கிறது. மும்மையிலிருந்து உலகம் முழுவதும் பயணிக்கும் பல க்ரூஸ் உல்லாசக் கப்பல்கள் இந்தியா முதலாளிகளுக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றில் ஒன்று எம்பிரஸ் பெயர்கொண்ட க்ரூஸ் கப்பல், அம்பானி நிறுவனத்துக்குச் சொந்தமான சகோதர நிறுவனத்துடையது. இந்தக் கப்பல் மும்பையில் இருந்து கோவாவுக்கு நேற்று முன் தினம் புறப்பட்டது. அந்தக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் பார்ட்டி நடக்க இருப்பதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த கப்பலில் 15 நாள் தங்கி பார்ட்டி கொண்டாடவும் மும்பையிலிருந்து கோவாவுக்கு பயணித்து அங்கே 7 நாட்கள் கப்பளிலேயே தங்கியிருக்கவும் ஒரு தலைக்கு 2.75 லட்சம் கட்டணமாகச் செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த கப்பலில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக் குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர், பயணம் மேற்கொள்பவர்கள் போல அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி கொண்டு கப்பலில் ஏறியதாகவும். அப்போது, போதை பார்ட்டியில் கலந்துகொண்ட ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட எட்டு பேர்களிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதன்பின்னரே அவர் கைது செய்யப்பட்டார் எனவும் மும்பை நார்க்காட்டிக் போலீஸார் அறிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை திங்கட்கிழமையான இன்று வரை காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.