free website hit counter

கொண்டாடத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தற்போது தளபதி விஜய்யை இயக்கி வருகிறார் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார்.

ஆனால், அதற்கு முன்பே, அவருடைய சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தில் சிவகார்திகேயன் ஜோடியாக தெலுங்குப் படவுலகில் பிரபலமாகியுள்ள பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்களும் பாடல்கள் உருவான கதையும் காணொளிகளாக இணைத்தை மில்லியன்களில் கலக்கி வருகின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 26 -ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் வெளியீடு பலமுறை தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின் ‘டாக்டர்’ படம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா என்ற குழம்பம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஓடிடி நிறுவனக்களுடன் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் திரையரங்குகள் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் திரையரங்கில் சுத்தமாக கூட்டம் இல்லை. ஆனால், மாஸ் ஹீரோ படங்கள் வெளியானால் மட்டுமே மீண்டும் திரையரங்குகளுக்கு கூட்டம் வரும் என்கிற நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில், டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளது. விரைவில் வெளியிட்டு தேதியும் அறிவிக்கப்படவுள்ளது. இதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: