free website hit counter

மீண்டும் வருகிறார் கனகா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முதுபெரும் கதாநாயகி நடிகையும் உதவி இயக்குனரை திருமணம் செய்துகொண்டவருமான தேவிகாவின் ஒரே மகள் கனகா.

வெள்ளி விழா கண்ட‘கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம்பிடித்தார் கனகா. அம்மாவைப் போலவே அப்பாவுடனான சண்டையில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் அவரைப் பற்றி பல்வேறு வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. ஆனால், அதையெல்லாம் மீறி சென்னையின் ஆர்.ஏ.புறத்தில் அமைதியாக வசித்து வருகிறார் கனகா. இவர் நடித்த கடைசி திரைப்படம் ‘விரலுக்கேத்த வீக்கம்’.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் “நான் நடிக்க வந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது சில காரணங்களால் இடையில் நடிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது மீண்டும் நடிக்க ஆர்வம் உள்ளதால் சினிமாவின் புதிய நுட்பங்களை கற்று வருகிறேன். விரைவில் படங்களில் எனக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்குவேன். அதன்பொருட்டு தயாரிப்பாளர்களை அணுகியபோது அவர்கள் மனமுவந்து வரவேற்றனர். இதுதான் நானும் அம்மாவும் சாம்பாதித்து வைத்துள்ள நற்பெயருக்கான அடையாளம். இனி, எனது வாழ்க்கையை மேகங்கள் மறைக்காது” என்று மனம் திறந்து கூறியிருக்கிறார். கனகாவின் வரவை விரைவில் எதிர்பார்க்கலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction