free website hit counter

படத் தயாரிப்பாளரின் முகமூடியைக் கிழித்த பிக்பாஸ் அனிதா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் அனிதா சம்பத்.

அந்தத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் உள்ள ஆண்களை விமர்சிக்கும் விதமாக அவரே உருவாக்கி வெளியிட்ட மீம்கள் மூலம் பிரபலமானார். இதையடுத்து தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய வேலையை துணிந்து ராஜினாமா செய்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் எதிர்மறையான எதிர்வினைகளை பெற்றார். இருப்பினும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த போட்டிகளில் நேர்மையுடன் விளையாடி பார்வையாளர்களின் ஆதரவையும் பெற்றார்.

நிகழ்ச்சியிலிருந்து 40 நாட்களின் முடிவில் ‘எலிமினேட்’ செய்யப்பட்ட அனிதாவுக்கு அவரது அப்பாவின் மரணம் பேரிடியாக இருந்தது. அதிலிருந்து மீண்ட அவர், வழக்கம் போல தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் வருகிறார். மீம்களையும் வெளியிடத் தொடங்கியிருக்கிறார். தற்போது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக் ஹாசனுடன் இணைந்து நடனமாடி வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாகக் கூறி, இளம்பெண் ஒருவரை தவறான விஷயத்திற்கு படத் தயாரிப்பாளர் ஒருவர் அழைத்துள்ளார். அனிதா சம்பத்திற்கு பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தன்னுடன் ஷாட் செய்த அந்தத் தயாரிப்பாளரின் தவறான அழைப்பை ஸ்கிரீன் ஷாட் ஆகப் பகிர்ந்துள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அனிதா சம்பத், “தோழி இந்த ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பினார். தயவு செய்து இந்த மாதிரி ஆட்களை நம்பாதீர்கள்” என இளம் பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் அனிதா சம்பத். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் பெயரை மறைத்துப் பதிவிட்டுள்ளதால், அந்தத் தயாரிப்பாளர் யார்?

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction