free website hit counter

இயக்குநர் ஷங்கரின் மகள் கதாநாயகியாக அறிமுகம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடிகர் சூரியாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், பல சிறு பட்ஜெட் மற்றும் 

பெரிய பட்ஜெட் படங்கள் என கலவையாகத் தயாரித்து வருகிறது. கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் கடைக்குட்டி சிங்கம், சூர்யா கதாநாயகனாக நடித்த சூரரைப் போற்று ஆகிய படங்களைத் தயாரித்தது. தற்போது மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் ‘விருமன்’என்ற படத்தை சூர்யா தயாரிக்கிறார். முத்தையா இயக்குகிறார். இந்தப் படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் சிவகுமார், லட்சுமி சிவகுமார், சூர்யா, கார்த்தி, புதிதாக அறிமுகமாகவுள்ள அதிதி ஷங்கர், இயக்குநர் ஷங்கர், அவரது மனைவி ஈஸ்வரி ஷங்கர், பிருந்தா சிவகுமார், தயாரிப்பாளர் எஸ்.தாணு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் பாலா, இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் சிறுத்தை சிவா, இயக்குனர் சுதா கோங்கரா, இயக்குனர் பாண்டிராஜ், இயக்குநர் முத்தையா, இயக்குனர் ஜெகன், இயக்குனர் த.செ.ஞானவேல், இசை அமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், DOP எஸ்.கே.செல்வகுமார், மாஸ்டர் அனல் அரசு, ஆர்ட் டைரக்டர் ஜாக்கி, போஸ்டர் நந்தகுமார், சக்தி பிலிம்ஸ் சக்திவேல் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ஏற்கெனவே முத்தையா இயக்கிய ‘கொம்பன்’ படத்தில் கார்த்தி நடித்திருந்தார். என்றாலும் கௌதம் கார்திக்கை வைத்து அவர் இயக்கிய ‘தேவராட்டம்’ வடிவேலுவின் காமெடிகளுக்கு இணையாக ட்ரோல் செய்யப்பட்டது. அதேநேரம் அவருடைய படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் தைரியம் மிக்கவர்களாகச் சித்தரிக்கப்பட்டு இருப்பார்கள். இயக்குநர் ஷங்கரின் மகளுக்கும் கனமான கதாபாத்திரம் தந்துள்ளேன் என்கிறார் முத்தையா. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction