free website hit counter

ரஞ்சித் ஜெயக்கொடியின் படத்தில் விஜய்சேதுபதி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விஜய்சேதுபதி நடித்த 'புரியாத புதிர்', ஹரிஷ் கல்யாண் நடித்த 'ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' மற்றும் இன்னும் வெளிவராத ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி.

அவருடைய இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'மைக்கேல்'. இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நாயகன் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநர் உடனான நட்புக்காக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அதேநேரம் இதில் விஜய்சேதுபதிக்கு அதிரடி சண்டைக்காட்சிகள் உள்ள ஆக்‌ஷன் ரோல் என இயக்குநர் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தத் திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.

விஜய் சேதுபதி - சந்தீப் கிஷன் ஆகிய இருவரும் முதன் முறையாக 'மைக்கேல்' படத்தில் இணைந்திருப்பதால், ஆந்திராவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் முதல் பார்வை இன்று வெளியானது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: